Chennai Airport: தாய்லாந்துக்கு கடத்தப்படவிருந்த அருகி வரும் ஆமைகள் மீட்கப்பட்டன

Tue, 17 Aug 2021-8:47 pm,

250 கிலோ உயிருள்ள நண்டு ஏற்றுமதி செய்வதாக ஆவணங்களில் காட்டி, அருகி வரும் உயிரினங்களில் ஒன்றான ஆமைகளை கடத்துவது சோதனையில் தெரியவந்தது.  15 பெட்டிகளில், அருகிவரும் 10 இந்திய நட்சத்திர ஆமைகள் இருந்தன. அவற்றுடன் சேர்த்து மொத்தம் 2,247 ஆமைகள் கைப்பற்றப்பட்டன. பிறகு அவாஇ, தமிழக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

அபாயகரமான உயிரினங்களில் சர்வதேச வர்த்தகம் பற்றிய ஒப்பந்தத்தின் (Convention on International Trade in Endangered Species) இணைப்பு 1இல் குறிப்பிட்டுள்ளபடி, இந்த ஆமைகள் ஆபத்தான உயிரினங்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 இன் அட்டவணை IV இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள அடர்வனங்களில் காணப்படும் இந்த ஆமைகள், பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. உணவுக்காகவும் இவற்றை பயன்படுத்துவதால், இந்த உயிரினமே அருகிவிட்டது. இந்த ஆமைகள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்றும் நம்பப்படுவதால், வீடுகளில் வைக்கப்படுகின்றன. இந்தியாவில் மிக சிறிய தொகைக்கு விற்கப்படும் இந்த ஆமைகள், கடத்தப்பட்டு வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link