Trisha Krishnan: விண்ணைத்தாண்டி வந்தாய்...கண்ணைத்தாண்டி செல்லாதே...ஜானு!!
பள்ளிப்பருவத்தில் இதயங்களை பரிமாற்றிக்கொண்ட இருவர் 22 ஆண்டுகள் பிறகு பள்ளி ரீ யூனியனில் சந்திக்கும் தருணம்.. இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப்போராட்டத்தை காட்டும் அற்புதமான படம்.
த்ரிஷாவை ஒரு காதல் தேவதையாக உயர்த்திய படம் இது. காதல் இருக்கிறதா இல்லையா? நட்புதானா இது? என்ன நினைக்கிறாள்? ஓடிப்போக ஆசைப்படுகிறாளா? என தன் முக பாவங்கள் மூலம் படம் பார்ப்பவர்களின் இதயங்களில் ஏகப்பட்ட கேள்விகளை தோன்ற வைத்திருப்பார்.
இந்த படத்தை பார்த்து இப்படி ஒரு பெண் நமக்கு வேண்டும் என பல பெற்றோர்கள் நினைத்திருப்பார்கள். அப்பாவின் பாசம், அம்மாவின் அன்பு அனைத்தையும் அறிந்து, அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து, தன் விருப்பத்திலும் திடமாய் நிற்கும் ஒரு அன்பு மகளாய் த்ரிஷா இப்படத்தில் உலா வருவார்.
படத்தில் சிறிது நேரமே தோன்றினாலும் மிக அழகான ஒரு நடன ஆசிரியையாக, அன்பான அம்மாவாக வரும் த்ரிஷா கடுமையான போலீசாக வரும் அஜித்தை மட்டும் அல்ல நம்மையும் மயக்கித்தான் விடுகிறார்.
பல இதயங்களின் ராணியாக இருந்த திரிஷாவை திரையில் இளவரசியாக பார்க்க வைத்த படம். மிக சவாலான கதாபாத்திரத்தை இப்படத்தில் இயல்பாக நடித்து அசத்தி இருக்கிறார் த்ரிஷா. குந்தவை என்றும் நெஞ்சில் நிற்பாள்!!