எச்சரிக்கை... இந்த பிரச்சனைகள் இருந்தால் மஞ்சள் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது
மஞ்சள் பால்: மஞ்சள் பாலை தினமும் குடிப்பதால், கிடைக்கும் நன்மைகளை பட்டியல் இடலாம். ஆனால், அளவிற்உ மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள், இதை குடிப்பதால் நன்மைக்கு பதிலாக பாதிப்பை ஏற்படுத்தும்.
கல்லீரல் பிரச்சனை: கல்லீரல் தொடர்பான நோய் ஏதேனும் இருந்தால், மஞ்சள் பாலை அளவிற்கு அதிகமாக குடிக்கக்கூடாது. இதன் காரணமாக, சில சமயங்களில் வயிற்றில் வீக்கமும் ஏற்படலாம். செரிமான அமைப்பு பலவீனமடைந்து, ஆசிடிட்டி பிரச்சனையும் ஏற்படலாம்.
இரத்த சோகை: மஞ்சளை அதிகமாக உட்கொள்பவர்களின் உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறன் குறைகிறது. இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால், இரத்த சோகை இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
இரத்தப் போக்கு: மஞ்சள் பால் உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடியது என்பதால், கர்ப்பிணிகள் அளவிற்கு அதிகமாக மஞ்சள் கலந்த பாலை குடிப்பதால் இரத்தப் போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால், அளவிற்கு அதிகமாகும் போது, இது சில நேரங்களில் குமட்டல் அல்லது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
ஒவ்வாமை: அளவிற்கு அதிகமாக மஞ்சள் பாலை அருந்தினால், சிலருக்கு சருமத்தில் எரிச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
செரிமானப் பிரச்சனைகள்: வாயு, நெஞ்செரிச்சல் போன்ற செரிமானப் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், மஞ்சள் பால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் செரிமான பிரச்சனை அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.