இது நதியா அல்லது கண்ணாடியா! இந்தியாவில் இப்படி ஒரு பளிங்கு நதியா?

Sun, 21 Nov 2021-2:48 pm,

இந்த ஆற்றின் நீர் (Crystal Clear Umngot River) மிகவும் தெளிவாக இருப்பதால் அதில் ஓடும் படகு காற்றில் மிதப்பது போல் தெரிகிறது. இந்த நதியின் படத்தை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆற்றுப் படுகையில் காணப்படும் கற்கள் தெளிவாகத் தெரிவதை படங்களில் காணலாம். இந்த ஆற்றின் உள்ளே இருக்கும் ஒவ்வொன்றும் தெளிவாகத் தெரியும். அதில் உங்கள் முகத்தை கூட பார்க்க முடியும்.

இந்தியாவின் நீர் வளத்துறை  அமைச்சகம் நதியின் புகைப்படத்தை ட்வீட் செய்து, 'உலகின் தூய்மையான நதிகளில் ஒன்றான உமாங்கோட் நதி இந்தியாவில் உள்ளது. படகு காற்றில் இருப்பது போல் உள்ளது; தண்ணீர் மிகவும் தெளிவாக உள்ளது. நமது நதிகள் அனைத்தும் இப்படி சுத்தமாக இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேகாலயா மக்களுக்கு எனது வணக்கங்கள் பல.

ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் என்ற அந்தஸ்தைப் பெற்ற மவ்லின்னாங் கிராமத்தின் வழியாக உம்ங்கோட் நதி செல்கிறது. இந்த கிராமம் இந்தியா-வங்காளதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த ஆறு ஜெயின்டியா மற்றும் காசி மலைகளுக்கு இடையே செல்கிறது.

 

இந்த நதியின் பெயர் உம்ங்கோட் நதி என்றாலும், மேகாலயாவில் இது டவ்கி நதி என்று அறியப்படுகிறது. இந்த ஆறு ஷில்லாங்கிலிருந்து 100 கி.மீ தொலைவில் பாய்கிறது. ஆற்றின் அருகே உள்ள காட்சிகளும் அற்புதமானவை. பறவைகளின் சத்தம் இங்கு எப்போதும் கேட்கிறது. இது தவிர ஆற்றில் விழும் சூரியக் கதிர்கள் இதயத்திற்கு மிகுந்த நிம்மதியைத் தரும்.

இந்த ஆற்றின் அருகே சூழல் மிகவும் ரம்மியமானதாக உள்ளது. இங்கு வரும்போது மலைகளில் ஓடும் நீரின் சப்தத்தைக் கேட்பது காதுக்கு நிம்மதியைத் தருகிறது. நீங்கள் இங்கு செல்ல விரும்பினால், நவம்பர் முதல் ஏப்ரல் வரை   ஏற்ற நேரம். இந்த நேரத்தில் இங்குள்ள வானிலை பார்வையிட மிகவும் ஏற்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link