Mr Zoo Keeper: சந்தானத்தை தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கும் விஜய் டிவி புகழ்!

Mon, 15 Jan 2024-1:25 pm,

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் குக்வித் கோமாளி புகழ்.  தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.

 

காமெடியன் மற்றும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த புகழ் தற்போது ஹீரோவா களமிறங்கி உள்ளார்.  மிஸ்டர் ZOO கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.

 

மிஸ்டர் ZOO கீப்பர் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி உள்ளது.  டீசர் முழுக்க காமெடி காட்சிகள் நிறைந்துள்ளது.  "அன்பு காட்டுனா புலி கூட பசு ஆகிடும்" போன்ற டயலாக் இடம்பெற்றுள்ளது.

 

மிஸ்டர் ZOO கீப்பர் படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். டீசருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

 

 j4 ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெ சுரேஷ் இயக்கத்தில் மிஸ்டர் ZOO கீப்பர் படம் தயாராகி உள்ளது.  யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link