ஒரே போட்டியில் சச்சின் சாதனையை ஊதி தள்ளிய விராட்.. இன்னும் லிஸ்ட் இருக்கு
வான்கடேவில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் விளையாடியது
இதில் களமிறங்கி அரைசதம் அடித்த விராட் கோலி ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்தார். குறிப்பாக சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
இலங்கை அணியுடனான போட்டியின் மூலம் நடப்பு கிரிக்கெட் ஆண்டில் (2023) தனது 1000வது ரன்னை விராட் கோலி பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஒரே வருடத்தில் அதிக முறை 1000+ ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி, விராட் கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 7 முறை ஒரே வருடத்தில் 1000+ ரன்களை அடித்து முதல் இடத்தில் இருந்தார். தற்போது இதனை விராட் கோலி முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.
அதே போன்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 8000 ரன்களை பூர்த்தி செய்த விராட் கோலி, ஆசியாவில் அதிவேகமாக 8000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
அதே போன்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக முறை அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் இலங்கை வீரர் சங்ககாராவை பின்னுக்கு தள்ளி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் சச்சின் முதல் இடத்தில் உள்ளார். அவர் 21 அரை சதங்கள் விளாசியிருக்கிறார்