விராட் கோலிக்கு தண்டனையை அறிவித்த பிசிசிஐ! எதற்காக தெரியுமா?
வான்கடே மைதானத்தில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிக்கு இடையே நடந்த போட்டியில் விராட் கோலியின் நடத்தைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அபராதம் விதித்துள்ளது. லெவல் 1 குற்றத்திற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக ஐபிஎல் 2024ன் 36வது போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நடத்தை விதி 2.8ன் கீழ் கோலி லெவல் 1 குற்றத்தைச் செய்தார். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் போட்டி நடுவரின் அனுமதியை ஏற்றுக்கொண்டார். நடத்தை நெறிமுறையின் நிலை 1 மீறல்களுக்கு, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது மற்றும் பிணைக்கப்படும்.
ஹர்ஷித் ராணாவின் ஃபுல் டாஸ் பந்தில் கோலி ஆட்டமிழந்தார். பின்பு நோ பாலுக்கு டிஆர்எஸ் எடுத்தார். இருப்பினும், மூன்றாவது நடுவர் அது அவுட் என கூறியதால் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
7 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் அடித்து இருந்த போது விராட் கோலி எதிர்பாராதவிதமாக அவுட் ஆனார். இந்த போட்டியில் ஆர்சிபி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.