ஆர்சிபி அணியை விட்டு விலகும் விராட் கோலி..! சூடான ஐபிஎல் அப்டேட்
ஐபிஎல் 2025 தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து பிசிசிஐ, அனைத்து ஐபிஎல் அணி உரிமையாளர்களையும் சந்தித்து ஆலோசிக்க இருக்கிறது. இந்த கூட்டம் ஜூலை 30 அல்லது 31 ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் வீரர்களுக்கான ஏலத் தொகை, இம்பாக்ட் பிளேயர் ரூல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கும் நிலையில், நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் ஏலம் நடைபெறும் தேதியும் இறுதி செய்யப்பட இருக்கிறது.
ஐபிஎல் ஏல தேதிகள் முடிவு செய்யப்பட்டவுடன், பத்து ஐபிஎல் அணிகளும் எந்தெந்த வீரர்களை எவ்வளவு தொகைக்கு ரீட்டெயின் செய்திருக்கிறார்கள் என்ற விவரத்தை ஏலம் நடைபெறுவதற்கு ஒருமாதத்துக்கு முன்பாக கொடுக்க வேண்டும். அதற்கான தேதியையும் பிசிசிஐ சார்பில் கொடுக்கப்பட இருக்கிறது.
இப்போதயை சூழலில் பிளேயர்கள் ரீட்டென்ஷன் லிஸ்டை அதிகப்படுத்த வேண்டும் என பல்வேறு ஐபிஎல் அணிகள் தரப்பில் முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட இருக்கிறது. ஒருவேளை பிசிசிஐ இதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால், எல்லா அணிகளும் சில அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
அந்தவகையில் பார்க்கும்போது ஐபிஎல் தொடங்கியது முதல் சாம்பியன் பட்டத்துக்காக காத்துக் கொண்டிருக்கும் ஆர்சிபி அணி, இம்முறை மிகப்பெரிய முடிவை எடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விராட் கோலியை அந்த அணி ரீட்டென்ஷன் செய்யாது என கூறப்படுகிறது.
ஆர்சிபி அணிக்காக விளையாடிய பார்தீவ் படேல் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் வைத்திருக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால், ராயல் சேலஞ்சர்ஸில் இருக்கும் வீரர்களுக்கு இடையே கடைபிடிக்கப்படும் விஐபி கலாச்சாரமே அந்த அணி கோப்பையை வெல்லாததற்கு மிக முக்கிய காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.
அதனால் அந்த அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டிருக்கும் ஆர்சிபி அணி, விராட் கோலியை ரீட்டெஷன் செய்ய வேண்டாம் என்கிற முடிவை எடுக்கப்போவதாக கிரிக்கெட் டிராக்கர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக விராட் கோலியை விடுவிடுப்பது தொடர்பாக இதுவரை ஆர்சிபி தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை விராட் கோலி வெளியேறினால் அது ஆர்சிபி அணிக்கும், விராட் கோலி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.