பெண்களுக்கு முடி கொட்ட காரணமே இதுதான்! இந்த தப்ப செய்யாதீங்க

Tue, 23 Jul 2024-2:30 pm,

முடி கொட்டுவதற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன. அதில் பெண்கள் கவனிக்காத காரணமும் ஒன்று வைட்டமின் டி குறைபாடு. இதனால் தலையில் புதிய மயிர்க்கால்களின் உற்பத்திக்கு வைட்டமின் டி தேவை. 

ஸ்டெம் செல்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வைட்டமின் டி புதிய மயிர்க்கால்களை உருவாக்க உதவுகிறது என்றும், அது முடி மீண்டும் வளர உதவுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

நம் உடலில் போதுமான வைட்டமின் டி இல்லாதபோது, அது சாதாரண மயிர்க்கால் சுழற்சியை சீர்குலைத்து, முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். சரி, வைட்டமின் டி குறைபாடு காட்டும் அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு, நீடித்த எனர்ஜி இருக்காது. எலும்பு வலி மற்றும் அசௌகரியம் ஏற்பட்டால் வைட்டமின் டி குறைபாடாக இருக்கலாம். சில ஆய்வுகள் குறைந்த வைட்டமின் டி இருப்பவர்களுக்கு மனச்சோர்வு உள்ளிட்ட மனநிலைக் கோளாறுகளும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

வைட்டமின் டி குறைப்பாட்டை கண்டறிய ரத்த பரிசோதனை ஒன்றையும் செய்தால் உறுதிபடுத்திக் கொள்ளலாம். ஒருவேளை வைட்டமின் டி குறைப்பாட்டை நீங்கள் உறுதி செய்துவிட்டால், அதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

சூரிய ஒளியில் போதுமான நேரத்தைச் செலவிடுவது உங்கள் உடல் வைட்டமின் D ஐ உற்பத்தி செய்ய உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு முறையாவது சுமார் 15-30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.

கொழுப்பு நிறைந்த மீன்கள், முட்டையின் மஞ்சள் கருக்கள், பால் பொருட்கள் மற்றும் சூரிய ஒளியில் வெளிப்படும் காளான்கள் போன்ற வைட்டமின் D நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்க்கவும். 

சூரிய ஒளி மற்றும் உணவில் இருந்து போதுமான வைட்டமின் டி பெறுவது சவாலானது என்றால், வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான பெரியவர்களுக்கு தினசரி 600-800 IU (சர்வதேச அலகுகள்) உட்கொள்ளுமாறு தேசிய சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link