ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.... உங்களை ஏமாற்றாத டயட் பிளான் இதோ
Weight Loss Diet: இன்றைய காலகட்டத்தில் பலர், ஆரோக்கியமற்ற உணவு முறையினை பின்பற்றி, ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளும் அதே நேரத்தில், பலருக்கு இப்போது, ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. அதனால் உடல் எடையை குறைக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்
உடல் பருமனை குறைக்க, உடற்பயிற்சி மிகவும் முக்கியம் என்றாலும், நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவு, சரியில்லை என்றால் அதனால் பலன் கிடைக்காது. குறைவான கலோரி கொண்ட சிறந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதால், உடல் எடையையும் தொப்பை கொழுப்பையும் சிறப்பாக கரைக்க முடியும்.
காலை உணவு: அன்றைய நாளுக்கான ஆற்றலை கொடுக்கும் காலை உணவு சிறந்த தேர்வாக இருக்க வேண்டும். ப்ரோ பயோடிக் உணவுகளான இட்லி தோசை போன்றவை, நல்ல தேர்வாக இருக்கும். அதோடு நட்ஸ் வகைகளை மறக்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவல் உப்புமா கோதுமை ரவை உப்புமா ஆகியவையும் நல்ல தேர்வாக இருக்கும். எல்லாவற்றிலும் காய்கறிகள் சேர்த்துக் கொள்வதால், சிறப்பான பலன் கிடைக்கும். சிறுதானியங்களையும் முடிந்த அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
மதிய உணவு: பருப்பு காய்கறிகளை சேர்த்த சாம்பார், அல்லது சப்பாத்தியுடன் பருப்பு மற்றும் காய்கறி வகைகள், பிறந்த தேர்வாக இருக்கும். அரிசி மற்றும் கோதுமைக்கு பதிலாக, சிறு தானியங்களை சேர்த்துக் கொள்வது நல்லது. சாப்பிடும் முன் ஒரு பிளேட் சாலடுகளை எடுத்துக் கொள்வது சிறப்பு.
சிற்றுண்டி: சிற்றுண்டையில் வறுத்த பொரித்த உணவுகளை தவிர்த்து, சுண்டல் சாப்பிடுவது நல்ல பலன் கொடுக்கும். அதோடு கேரட் மற்றும் வெள்ளரிகள் போன்ற பிரஷான காய்கறிகளின் சாலடும் நல்ல தீர்வாக இருக்கும். ஒரு கைப்பிடி நெட் சாப்பிடுவதும், நல்லது.
இரவு உணவு: இரவு உணவில் உங்களுக்குப் பிடித்த வகையில் சப்பாத்தி அல்லது அரிசி உணவுகளான இட்லி தோசை சாப்பிடலாம். எதுவாக இருந்தாலும் காய்கறிகள் சேர்த்து சமைத்த கட்டாயம் இருக்க வேண்டும். இரவு உணவு மிகவும் லைட்டாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி: மேலே குறிப்பிட்டுள்ள டயட்டை பின்பற்றுவதை தவிர, நாளொன்றுக்கு அரை மணி நேரம் நடை பயிற்சி கண்டிப்பாக தேவை. இதனால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுவதோடு, மூட்டுகள் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக இருக்கும். அது ஒரு நல்ல தூக்கமும் தேவை.
பொறுப்புத் துறப்பு: மேலே குறிப்பிட்டுள்ள உடல் எடையைக் குறைப்பதற்கான டயட் பிளான்கள் உணவியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டவை. இருப்பினும், மருத்துவர் அல்லது நிபுணரிடம் கலந்தாலோசித்த பின்னரே உங்கள் உணவு மற்றும் தினசரி வழக்கத்தில் மாற்றங்களைச் செய்வது நல்லது. மேலும், உடலின் தன்மைக்கு ஏற்ப எடை இழக்கும் முயற்சிக்கான பலன்கள் வேறுபடும்.