உடல் எடையை உடனே குறைக்க இந்த பானங்களை தினமும் குடிங்க
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம். உடல் எடை அதிகரிப்பதால் பல வித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
உடலை கட்டுக்கோப்பாகவும், மெலிதாகவும் வைத்திருக்க விரும்பினால், டிடாக்ஸ் பானங்களுடன் உங்கள் நாளைத் தொடங்குவது நல்ல பலனைத் தரும். இந்த பானங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன. இது தவிர, உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களையும் இவை சுத்தம் செய்கின்றன.
எடை இழப்புக்கு சீரக நீரை (Cumin Water) உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. சீரக நீர் குறைந்த கலோரி பானமாகும். இது தொப்பை கொழுப்பை (Belly Fat) எரிக்க உதவுகிறது. இது மட்டுமின்றி, இதனை உட்கொள்வதால் அடிக்கடி பசி எடுப்பது குறைகிறது. இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இதன் காரணமாக விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.
மல்லி தண்ணீர் அதாவது தனியா நீர் (Coriander Water) விரைவாக உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் உடலில் சேரும் கொழுப்பு குறைகிறது, இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.
எலுமிச்சை நீரை (Lemon Water) உட்கொள்வது எடையை விரைவாகக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எலுமிச்சை நீரில் பெக்டின் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாக நிறைந்துள்ளன. இது தொப்பை கொழுப்பைக் கரைக்க பெரிதும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க, வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிக்கலாம்.
சோம்பு தண்ணீரை (Fennel Water) உட்கொள்வது உடல் எடையை விரைவாகக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. சோம்பு நச்சு நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. உடல் எடையைக் குறைக்க, சோம்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதை கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான பதத்தில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
இரவில் வெந்தயத்தை ஊற வைத்து அடுத்த நாள் காலையில் இதை பருகி வந்தால், நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். எடை குறைப்பதில் உதவுவது மட்டுமல்லாமல். இது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை