Low BP பிரச்சனையால் அவதியா? உடனடி நிவாரணம் தரும் வீட்டு வைத்தியங்கள் இதோ

Fri, 24 Nov 2023-3:48 pm,

ஒரு ஆரோக்கியமான நபரின் இரத்த அழுத்தம் பொதுவாக 120/80 mmHg ஆக இருக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த இரத்த அழுத்தம் 90/60 mmHg க்கும் குறைவாக இருந்தால், அது குறைந்த இரத்த அழுத்தம் (Low Blood Pressure) என்று அழைக்கப்படுகிறது.

 

குறைந்த இரத்த அழுத்தம் இருக்கும் ஒரு நபர் பொதுவாக தலைச்சுற்றல், தலைவலி, வாந்தி, சோர்வு மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகளை உணர்கிறார். இது சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், நோயாளி மாரடைப்பையும் சந்திக்க நேரிடும். குறைந்த இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சில வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பச்சை காய்கள் மற்றும் கீரை வகைகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கலாம்

பிஸ்தா, வால்நட் போன்ற உலர் பழங்கள் மற்றும் கொட்டை வகைகளும் மிகவும் குறைவாக உள்ள இரத்த அழுத்த அளவுகளை அதிகரிக்க உதவுகின்றன.

 

குறைந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த (Low BP Control Tips) உலர் திராட்சையை உட்கொள்ளலாம். இதற்கு இரவில் தூங்கும் முன் 4-5 உலர் திராட்சைகளை தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன், உங்கள் காலை கடன்களை முடித்த பின்னர், இவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள். வேண்டுமானால் அந்த தண்ணீரையும் குடிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் இரத்த அழுத்தம் சாதாரண நிலையில் இருக்கும். 

அஸ்வகந்தாவின் பயன்பாடு குறைந்த இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பல சத்துக்களும் பண்புகளும் இதில் உள்ளன. இதை உட்கொள்ள, ஒரு ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு, அரை கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் இந்த பொடியை கலந்து சாப்பிடுங்கள். இந்த பொடியை தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு துளசி இலைகள் சர்வ ரோக நிவாரணி மருந்தாக செயல்படுகிறது. பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் ஆகியவை துளசி இலைகளில் ஏராளமாக உள்ளன. பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் இதில் காணப்படுகின்றன. இது உடலில் இயல்பான இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால், 4 துளசி இலைகளை சுத்தம் செய்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும் என உடல்நல நிபுணர்களின் கூறுகிறார்கள். 

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link