Fake Vaccination என்றால் என்ன? போலி தடுப்பூசி மையத்தை எவ்வாறு கண்டறிவது?

Wed, 30 Jun 2021-4:42 pm,

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி போடவேண்டும் என்ற பிரசாரம் ஒருபுறம் நடக்கிறது. மறுபுறம், போலி தடுப்பூசி தொடர்பான தகவல்கள் அம்பலமாகின்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்து இது தொடர்பான செய்திகள் வெளியாகின்றன. போலி தடுப்பூசியால் நடைபெறும் மோசடியால் பலருக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.  இதனால் பலருக்கு கவலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் போலி தடுப்பூசியிலிருந்து தப்பிக்கலாம்.

ஒரு குடியிருப்புக் காலனியில் தனியார் தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்ய திட்டமிட்டால், அவர்கள் முதலில் காவல்துறை, குடியிருப்போர் நலச் சங்கம், உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் தடுப்பூசி முகாம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்துவார்கள்.

ஆர்.டபிள்யூ.ஏ அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்யலாம். போலிக் குழுக்கள் ஏதேனும் போலி தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்ய விரும்பினால், நம்பகமான தனியார் மருத்துவமனைகள் மூலம் ஏற்பாடு செய்யவேண்டும்.

தடுப்பூசி போட விரும்புவோர் cowin App அல்லது போர்ட்டலுக்கு சென்று தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்ட உடனேயே தடுப்பூசி சான்றிதழையும் மையத்திலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். சான்றிதழ்களை வழங்க மறுக்கும் மையங்கள் போலியானவை. அதாவது, நீங்கள் போட்ட தடுப்பூசி போலியானதாக இருக்கலாம்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட, சிலருக்கு காய்ச்சல், மைக்ரேன், தலைவலி ஏற்படலாம். ஆனால் அப்படி ஏற்படவேண்டும் என்ற அவசியம் இல்லை. பெரும்பாலானோருக்கு ஓரிரு நாட்கள் சிரமம் இருக்கும். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு, இதுபோன்ற அறிகுறிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். உங்களுடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட மற்றவர்களிடமும் இதுதொடர்பாக பேசி தெரிந்துக் கொள்ளவும். தடுப்பூசி மையம் ஒன்றில் தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்குமே எந்த நலக் குறைவும் ஏற்படாவிட்டால் தடுப்பூசி மையம் போலியானது. உடனே இந்த விவரத்தை   உள்ளூர் நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link