ஆயுளை அதிகரிக்க இந்த வாழ்க்கைமுறை மாற்றங்கள் அவசியம்! ஹைப்பர்டென்சன் மரணங்கள் அலர்ட்

Thu, 21 Sep 2023-8:11 am,

உயர் இரத்த அழுத்தத்தின் உலகளாவிய தாக்கம் குறித்து WHO பரிந்துரைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட முதல் அறிக்கையின்படி, உயர் இரத்த அழுத்த பாதிப்பு கொண்ட இந்தியர்கள் தங்களது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தினால், 2040 ஆம் ஆண்டளவில் குறைந்தது 4.6 மில்லியன் இறப்புகளைத் தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம் (140/90 mmHg அல்லது அதற்கு அதிகமானது) சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எடுத்துரைத்துள்ளது. மாரடைப்பு போன்ற இருதய நிலைகளால் ஏற்படும் இந்தியாவில் ஏற்படும் 52% இறப்புகளுக்கு உயர் இரத்த அழுத்தம் தான் காரணம் என WHO தெரிவித்துள்ளது.

ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவைப் பின்பற்றுவது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் உதவும். உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு போன்றவற்றை குறைவாக உண்பதும் ஆரோக்கியமான உணவை உண்பதும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கவும் என்ன செய்வது என்ற கேள்விக்கான ஒற்றை பதில், தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சிகளைச் சேர்ப்பது என்று சொல்லலாம். தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

உடல் பருமன், உயர் இரத்த அழுத்தத்திற்கு மற்றொரு காரணியாகும். உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

புகைபிடிப்பதை விரும்புகிறீர்களா? இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உடனடியாக புகைபிடிப்பதை நிறுத்தவும்

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் மது அருந்துவதை நிறுத்துவது முக்கியம். அதிகப்படியான ஆல்கஹால் உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கும்போது மன அழுத்தத்தை நிர்வகிப்பது முக்கியம்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள், நிலைமையை நிர்வகிப்பதற்கான சில பரிந்துரைகள் மற்றும் குறிப்புகள் மட்டுமே. உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link