Hydrated Snack: ஊட்டச்சத்துக்கு மட்டுமல்ல, உணர்வு சத்துக்கும் ஊக்கமளிக்கும் திராட்சைப்பழம்

Wed, 08 Nov 2023-10:09 am,

 உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பழங்களில் ஒன்றான திராட்சைப்பழம் ஒருவரின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?  

திராட்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பழமாக உண்டாலும் சரி, பழச்சாறாக பருகினாலும் சரி, ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது திராட்சை

பல்வேறு வகையான திராட்சை ரகங்கள் இருந்தாலும், பிரபலமானவை, கருப்பு, சிவப்பு, பச்சை திராட்சைகள் ஆகும். ஹைபிரிட் திராட்சை தற்போது அதிகமாக விளைவிக்கப்படுகிறது. 

திராட்சை (Grapes) சாப்பிடுவதால் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகளும் காணமல் போய்விடும்

வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளதால் திராட்சைப்பழம், நமது சருமத்தை பாதுகாக்கிறது. இதிலுள்ள லைகோபீன் மற்றும் ரெஸ்வெராட்ரோல் ஆகியவைநமது சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. சருமத்தில் ஈரப்பதத்தை பராமரிப்பதுடன் சருமப் பிரச்சனைகளில் (Skin problems)  இருந்து நிவாரணம் அளிக்கிறது

கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கும் குணங்களை கொண்ட திராட்சைப்பழம், தமனிகளை சுத்தப்படுத்துகிறது. இரத்த ஓட்டமும் சீராக்கும் திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் என்ற கலவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

திராட்சை சாப்பிடுவது எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. திராட்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து எடை குறைக்க உதவுகிறது. 

ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினசரி இரண்டு பழங்களையாவது நாம் உட்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பழங்களின் பட்டியலில் திராட்சைப்பழத்திற்கு முக்கிய இடம் உண்டு

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link