டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன... காரணம் தெரியுமா..!

Sat, 29 Apr 2023-10:35 pm,

உங்கள் வாழ்க்கையில் பல்வேறு வகையான, பல்வேறு வண்ணங்களில் ஆன வாகனங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதுவரை நீங்கள் பல வாகனங்களில் பயணித்திருக்க கூடும், ஆனால் வாகனத்தின் நிறம் எதுவாக இருந்தாலும், அவற்றின் டயர்கள் எப்போதும் கருப்பு நிறத்தில் இருக்கும் என்பதை பற்றி நீங்கள் எப்பொழுதாவது யோசித்து இருக்கிறீர்களா.

1917 ம் ஆண்டுக்கு முன்பு வாகனத்தின் டயர்கள் கருப்பாக இல்லை. வாகனங்களில் பயன்படுத்தப்படும் டயர்களின் நிறம் பழுப்பு அல்லது வெள்ளை நிறமாக இருந்தன. பிறகு என்ன நடந்தது இந்த நிறம் கருப்பு நிறமாக மாறியது, அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

 

1917 ம் ஆண்டுக்கு முன்பு  டயர்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்பட்ட இயற்கை ரப்பர் பழுப்பு அல்லது வெள்ளை நிறத்தில் இருந்தது. ஆரம்ப கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து டயர்களும் மிகவும் லேசானதாக இருந்தன. அப்போது டயர்களை வலுப்படுத்த ஜிங்க் ஆக்சைடு என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டது.

இருப்பினும், அதன் டயர்களில் மென்மை தன்மை இருந்தது. இதன் பிறகு, டயர் தயாரிப்பாளர்கள் அதை மேம்படுத்த சில மாற்றங்களைச் செய்தனர். டயர்களை வலுவாக்கும் நோக்கில் டயர் தயாரிப்பதில் கார்பன் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அதன் நிறம் கருப்பு நிறமாக மாறியது. சந்தையில் கருப்பு டயர்களின் அறிமுகம் 1917 ஆம் ஆண்டு தொடங்கியது.

 சூரியனின் புற ஊதா கதிர்கள் ரப்பர் டயர்களுக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்துகின்றன, இதன் காரணமாக அவற்றில் விரிசல்களும் தோன்றின. மறுபுறம், கார்பன் இந்த புற ஊதா கதிர்களைத் தடுக்கிறது. இதன் காரணமாக டயர்கள் நீண்ட காலம் நீடிக்கும். 

கார்பன் சேர்ப்பதால், சாலையில் வாகனம் செல்லும் போது டயர்களில் வெடிப்புகள் ஏற்படும் என்ற அச்சமும் குறைகிறது. அனைத்து டயர் தயாரிப்பாளர்களும் இந்த முறையை பின்பற்றியதற்கும், இதன் மூலம் டயரின் நிறம் கருப்பு நிறமாக மாறுவதற்கும் இதுவே முக்கிய காரணம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link