நகை கூட வாங்கிடலாம்... ‘இந்த’ காய்கறிகளை வாங்குவது மிகவும் கடினம்!

Tue, 22 Nov 2022-2:43 pm,

ஜப்பானிய கீரை : மிகவும் சிறப்பான மற்றும் சத்தான இந்த யமஷிதா கீரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விளைவிக்கப்படுகிறது. இந்த கீரையை வளர்க்க தீவிர கவனிப்பும் பல வருட பொறுமையும் தேவை. இதன் விலை ஒரு பவுண்டுக்கு $13 அதாவது இந்திய மதிப்பில் 1 கிலோ கீரை வாங்க ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும்.

500 கிராம் (அரை கிலோ) உருளைக்கிழங்கு வாங்க 24,000 ரூபாய் செலவழிக்க வேண்டும் என்றால் நம்ப முடிகிறதா? அத்தகைய விலையுயர்ந்த உருளைக்கிழங்கு பிரான்சில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சிறப்பு உருளைக்கிழங்கு மேற்கு பிரான்சில் விளைகிறது. இதன் விலை கிலோ ரூ.24,000 ஆகும். மிகவும் விலையுயர்ந்ததற்குக் காரணம் அதன் குறைந்த அளவு கிடைப்பதே ஆகும். இந்தச் சிறப்பு வாய்ந்த உருளைக்கிழங்கின் விளைச்சல் ஓராண்டில் 100 டன்கள் மட்டுமே என 'இடிவா'வில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.  இது அபாரமான சுவை கொண்டது என்றும் கூறப்படுகிறது.

உலகின் மிக விலையுயர்ந்த காளான் பற்றிய விவாதம்அடிக்கடி நடப்பதை கேட்டிருக்கலாம். சில வெளிநாட்டு விவசாயிகள் தைவானிய Yartsa Gunbu தான் மிகவும் விலையுயர்ந்த காளான் என்று கருதுகின்றனர். அதே நேரத்தில் பல காய்கறி விவசாயிகள் ஜப்பானிய மாட்சுடேக் என்னும் காளான் விலை உயர்ந்ததாக கருதுகிறார்கள். இங்கு படத்தில் காணப்படும் ஸ்பெஷல் காளானின் விலை இந்திய மதிப்பில் ஒரு கிலோ சுமார் இரண்டரை லட்சம் ரூபாய்.

இந்த காய்கறியின் பெயர் இது பிங்க் லெட்யூஸ். இதன் சுவை சற்று கசப்பாக இருக்கும். இது ஒரு பவுண்டுக்கு 10 டாலர்கள் என்ற விகிதத்தில் விற்கப்படுகிறது, இந்திய மதிப்பில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு சுமார் 1600 ரூபாய்.

வசாபி வேர்: இது வடக்கு ஜப்பான், சீனா, கொரியா, தைவான் மற்றும் நியூசிலாந்தில் மட்டுமே பயிரிடப்படுகிறது. இது சாதாரண வசாபி வேர் அல்ல. அதன் சுவை தனித்தன்மை வாய்ந்தது மற்றும் சுவையானது. இந்த வகை வசாபி வேர் 1/2 கிலோ வாங்க, நீங்கள் சுமார் ரூ.5000 செலவழிக்க வேண்டும்.

உலகின் மிக விலையுயர்ந்த இந்த காய்கறியின் பெயர் 'ஹாப் ஷூட்ஸ்'. இந்த காய்கறி அளவில் சிறியது. அதை அறுவடை செய்வது மிகவும் கடினம். உலகின் பல காய்கறி சந்தைகளில் இதன் விலை கிலோ 80 ஆயிரம் முதல் 85 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link