வெள்ளை உடையில் மனதை கொள்ளையடிக்கும் யாஷிகா ஆனந்த்!

Thu, 30 Nov 2023-11:37 pm,

பிரபல நடிகை யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன. 

தமிழ் திரையுலகில் உள்ள இளம் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவர், யாஷிகா ஆனந்த். இவருக்கு 24 வயதாகிறது. 

யாஷிகா ஆனந்த், துருவங்கள் 16 படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் பலரால் அறியப்பட்டார். 

யாஷிகாவிற்கு 2021ஆம் ஆண்டு பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவருடன் அவரது தோழியும் பயணித்திருந்தார். அவர், அந்த விபத்தில் மரணமடைந்தார். யாஷிகா படுகாயத்துடன் உயிர்தப்பினார். 

நீண்ட இடைவேளைக்கும் பிறகு, யாஷிகா மீண்டும் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார். சமீப காலமாக அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும் இன்ஸ்டா கிராமில் பதிவிட்டு வருகிறார். 

யாஷிகா, வெள்ளை உடையில் எடுத்த சில போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், யாஷிகா மீதுள்ள காதலை கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link