Year Ender 2020: ஹாரி & மேகன் மார்கெல் திருமணம் முதல் Megxit வரை

Tue, 08 Dec 2020-8:44 pm,

மேகன் மற்றும் ஹாரி: ஆரம்பம்: பிரிட்டன் பட்டத்து இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையான மேகன் மார்கெல் என்பவரை காதலித்தார், மேகன் மார்க்ல் மற்றும் இளவரசர் ஹாரியின் காதல் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. 

பல வருட டேட்டிங்கிற்குப் பிறகு, இந்த ஜோடி 2018 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் வழக்கத்தின்படி திருமணம் செய்து கொண்டனர்.

(புகைப்படம்: ட்விட்டர்)

மேகன் கர்ப்பமாக இருந்தபோது, தம்பதியினர் தனியாக வாழ முடிவு செய்தனர், கென்சிங்டன் அரண்மனையில் அரச குடும்பத்தினருடன் வசிப்பதற்கு பதிலாக, இந்த ஜோடி விண்ட்சரில் உள்ள ராயல் ஃபிராக்மோர் தோட்டத்திற்கு சென்றது.

(புகைப்படம்: ட்விட்டர்)

 

வழக்கமாக அரச குடும்பத்தில் குழந்தைகள் பிறந்தால் மருத்துவமனையிலேயே புகைப்படங்கள் எடுக்கப்படும். அதை தவிர்த்த ஹாரி தம்பதிகள், சில நாட்களுக்குப் பிறகு விண்ட்சர் கோட்டையில் ஒரு தனியார் விழாவின் போது புகைப்படங்களை எடுத்து வெளியிட்டனர்.

(Image Courtesy: Instagram/@sussexroyal)

பெரும்பாலான செய்திகளில், மேகன், 'ஹோம் பிரேக்கர்' என்று அழைக்கப்பட்டார். மார்க்கலை அவதூறு செய்வதாக பத்திரிகைகளை கண்டித்து ஹாரி ஒரு அறிக்கையை வெளியிட்டார், இங்கிலாந்து ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.  இறுதியில் சில டேப்லாய்டுகள் மீது வழக்கும் தொடரப்பட்டது.

(புகைப்படம்: ட்விட்டர்)

இந்த ஜோடி இங்கிலாந்துக்கு வெளியே செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வந்ததால், 2019 ஆம் ஆண்டு முழுவதும், மேகன் மற்றும் ஹாரியை ஊடகங்கள் பின்தொடர்ந்தனர்

(புகைப்படம்: ட்விட்டர்)

2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில், மேகன் இங்கிலாந்தை விட்டு வெளியேறி கனடாவுக்குச் சென்றார். எலிசபெத் மகாராணி அவர்களின் முடிவை ஆதரிக்கும் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, தம்பதியினர் இங்கிலாந்து மற்றும் கனடாவில் வசிப்பதாக அறிவித்தனர்.  "எனது குடும்பம் எனது பேரன் மற்றும் அவரது குடும்பத்தின் எதிர்காலம் குறித்து மிகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தியது,"என்று இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அறிக்கை ஒன்றில் அறிவித்தார். "அவர்கள் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்க நானும் எனது குடும்பமும் முழுமையாக ஆதரவளிக்கிறோம்," என்று ராணி எலிசபெத் குறிப்பிட்டார்.  

(புகைப்படம்: ட்விட்டர்)

அக்டோபர் 2019 இல், நவம்பர் மாத தொடக்கத்தில் அரச கடமைகளில் இருந்து ஆறு வார கால இடைவெளி எடுத்துக் கொள்வதாக ஹாரி அறிவித்தார். அரச குடும்பத்தினரிடமிருந்து விலகி தனியாக கிறிஸ்துமஸை கொண்டாடினார்கள். விடுமுறையில் இருந்து திரும்பிய சிறிது நாட்களிலேயே, அரச குடும்பத்தைச் சேர்ந்த ஹாரி தம்பதிகள் தாங்கள் "பொருளாதார ரீதியாக சுயாதீனமாக" செயல்படுவதாகவும், அரச குடும்பத்திலிருந்து "பின்வாங்கி" இருப்பதாகவும் அறிவித்தனர்.

(புகைப்படம்: ட்விட்டர்)

 

ஹாரி தம்பதிகள் அரச குடும்பத்தில் இருந்து விலகிய பிறகு, ராயல் ஹைனஸ் என்ற தங்கள் பட்டத்தையும் துறந்தனர். இனிமேல் ஹாரியின் குழந்தைகள் அரச குழந்தைகள் என அழைக்கப்படமாட்டார்கள்.

1996 ஆம் வருடம் ஹாரியின் தாய் டயானா சார்லஸ் தனது கணவர் இளவரசர் சார்லஸை விவாகரத்து செய்தபோது அரச பட்டம் மற்றும் பதவிகளைத் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(புகைப்படம்: ட்விட்டர்)

கடந்த புத்தாண்டை அரச தம்பதிகளாக கொண்டாடிய ஹாரி-மேகன் ஜோடி இந்த புத்தாண்டை சாதாரண குடிமக்களாக கொண்டாடும்.

(புகைப்படம்: ட்விட்டர்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link