தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!
தொடை சதையை குறைக்க உதவும் யோகாசனங்கள். இதை செய்தால் மொத்த உடலுக்கும் நன்மை என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன ஆசனங்கள் தெரியுமா?
வீரபத்ராசனம்:
இந்த ஆசனம், உங்கள் உள் தொடைகளில் இருக்கும் தசைகளை குறைக்க உதவும். இது, கால்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் விளங்குகிறது.
உட்கட்டாசனம்:
இந்த ஆசனத்தை chair pose என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடலாம். இது, காலில் இருக்கும் தசை மற்றும் எலும்புகளை குறிவைத்து செய்யப்படும் உடற்பயிற்சியாகும். இதனால் இடுப்பு மற்றும் தொடை எலும்புகள் வலுவடையும் என கூறப்படுகிறது.
உபவிஸ்தோ கோனாசனம்:
இந்த ஆசனம், உங்கள் கணுக்காலில் இருந்து இடுப்பு வரை வலு பெற உதவலாம். கால்களுக்கு நல்ல ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சியாகவும் இந்த ஆசனம் விளங்குகிறது.
நடராஜாசனம்:
இது, உடல் அமைப்பை மாற்றி அமைக்க உதவும் உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும். இதில், தொடையின் உள் மற்றும் வெளி தசைகள் வலுபெறலாம்.
மலாசனம்:
கால்களுக்கும் இடுப்புக்கும் வலுகொடுக்கும் யோகாசனங்களுள், மலாசனமும் ஒன்ரு. இது, காலுக்கும் இடுப்பிற்கும் சரியான ரத்த ஓட்டம் செல்வதை உறுதிப்படுத்துகிறது.
ஜனு சிரசாசனம்:
கால்களில் இருக்கும் எலும்புகளையும், இடுப்பு இணையும் இடத்தையும் வலுவாக மாற்ற உதவுகிறது, ஜனு சிரசாசனம். இதை செய்யும் போது தசைகள் இறுகி, தளர்வான தசைகளை இழக்க உதவுகிறது.
பாத கோணாசனம்:
இடுப்பு வலி, முதுகு வலியை நிவர்த்தி செய்வதோடு மட்டுமன்றி, கால் தசைகளையும் குறைக்க உதவுகிறது, பாத கோணாசனம் எனும் ஆசனம். இது, தொடையில் இருக்கும் அதிக கொழுப்பினையும் கரைக்க உதவுகிறது.