12 மொழிகளில் Zee குழுமத்தின் ZEE5 இணையதளம்!
ZEE குழுமத்தின் சேவையானது 5 கண்டங்களில் கிடைக்கப்பெறுகிறது என்பதினை குறிக்கும் வகையினிலேயே ZEE5 என்று குறிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 வருடங்களாக தங்களது சேவையினை Zee குழுமம் சிறப்பாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மாதாந்திரம் ரூ.150 செலுத்தி ZEE5 சந்தாதாரர் ஆகும் ஒருவர், ZEE5 பக்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒரு மாதத்திற்கு கண்டு ரசிக்கலாம். ஆனால் தற்போது அறிமுக சலுகையாக இந்த வசதியினை மக்கள் ரூ.99 க்கு பெற்று ரசிக்கலாம்.
இந்த இணைய சேவையானது 12 இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதன்படி தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, பெங்காளி, தெலுகு, ஓரியா, போஜ்பூரி, குஜராத்தி, பஞ்சாபி, கன்னடா ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
மொழிவாரியான பாகுபாடுகள் இன்றி, நாடுமுழுவதும் அனைத்து மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையினில் இந்த இணையதள சேவை மக்களை சென்றடையவுள்ளது. 90-க்கும் அதிகமான தொலைகாடசிகளின் நேரடி ஒளிப்பரப்பினை பார்க்கவும் இந்த வலைதளம் வழிவகுக்கிறது.
பிப்.,14 2018 முதல் துவங்கி Zee Entertainment குழுமத்தின் பொழுதுபோக்கு வலைப்பக்கத்தின் சேவையினை மக்கள் கண்ட ரசிக்கலாம். ZEE5 என்ற பெயரில் இந்த இணையதள சேவை இந்தியா முழுவதும் வழங்கப்படவுள்ளது.
Zee குழுமத்தின் பொழுதுபோக்கு பிரிவு நிறுவனமான Zee Entertainment Enterprises Ltd-ன் ப்ரத்தியேக இணையதள சேவை தொடங்கப்பட்டது! 173 நாடுகளில் சுமார் 1.3 பில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ZEEL உலகலாவிய ஊடகங்களில் முதன்மையானதாக விளங்குகிறது என்றால் மிகையள்ள!