தமிழகம் வந்துள்ள பாஜக-வின் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா மற்றும் பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வணிகர் தின மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்த பாஜக அதிருப்தியாளர்களான யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா இருவரும் ஆழ்வார்ப்பேட்டையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார்கள். மூன்றாவது அணி குறித்தும், பாஜக-விடம் இருந்து நாட்டை மீட்கவும் ஆலோசனை நடைபெற்றது. பின்னர்  கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்கள். 


 



 


இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘நாட்டில் மதச்சார்பி்ன்மை, ஜனநாயகம், அரசியல் சாசனத்துக்கு இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. இந்த ஆபத்தில் இருந்து நாட்டை காக்கவும், மத்திய அரசை எப்படி வீழ்த்துவது என ஆலோசனை நடத்தப்பட்து எனக் கூறினார்கள்.


திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரித்த பாஜக-வின் முன்னால் மந்திரி மற்றும் பாஜக எம்.பி ஆகியோருக்கு நன்றி கூறினார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.