தவறான செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இதையடுத்து, கைது செய்யப்பட்டு அவரிடம், சி.பி.சி.ஐ.டி., மற்றும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்த சந்தானம் கமிஷன் சார்பில் தனித்தனியாக விசாரணை நடக்கிறது.

 

மதுரையில் சந்தானம் கமிஷன் நேற்று முன்தினம் 2 ம் கட்ட விசாரணையை துவக்கினார். விசாரணையை வீடியோ பதிவும் வாக்குமூலத்தை தட்டச்சர் பதிவும் செய்தனர்.

 

சந்தானம் கமிஷனுக்கு இதுவரை கிடைத்த தகவல் அடிப்படையில் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. 

 

கைதாகி சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் உள்ள உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பு குறித்த கேள்விகள் கேட்கப்பட்டனர். 

 

அனைத்து கேள்விகளுக்கும் நிர்மலா தேவி நிதானமாக பதில் அளித்தார் எனவும் சந்தானம் கமிஷன் தகவல் தெரிவித்துள்ளது.