PM Modi in Puducherry: காத்து எங்க பக்கம் திரும்பிடுச்சு, காங்கிரஸ் ஆட்சி அமைக்காது
புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது விருப்பம் என்று புதுச்சேரி பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி சூளுரை…
புதுச்சேரி: ஒருநாள் பயணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவதே தனது விருப்பம் என கூறினார்.
புதுச்சேரிக்கு பல வளர்ச்சி வாய்ப்புகளை அளிக்கும் பல மேம்பாட்டு திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன என்று கூறிய பிரதமர், “பல மேம்பாட்டு திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. இது புதுச்சேரிக்கு பல வளர்ச்சி வாய்ப்புகளை அளிக்கும். இங்கு மக்களின் எழுச்சியுடன் இருக்கின்றனர். புதுச்சேரியில் காற்று திசை மாறி வீசுவதை காட்டுகிறது” என்று தெரிவித்தார்.
மக்களின் மகிழ்ச்சிக்கு காரணம் இன்று துவங்கப்பட்ட மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் மோசமான காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விடுபட்டுள்ளது தான் என்று கூறிய பிரதமர், கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்ததாக தெரிவித்தார்.
Also Read | போலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை
புதுவையின் முன்னாள் முதல்வர் தனது கட்சித் தலைவரின் கால் செருப்பைத் தூக்க கவனம் செலுத்துபவராக இருந்தார், மக்களை ஏழ்மையில் இருந்து உயர்த்த கவனம் செலுத்தவில்லை என்று சொல்லி முன்னாள் முதல்வர் நாராயண சாமியின் பெயரை குறிப்பிடாமல் தாக்கிப் பேசினார்.
ஜனநாயக விரோதி என மற்றவர்களை கூறும் காங்கிரஸ் கட்சி, புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. ஜம்மு காஷ்மீரிலேயே தேர்தலை நடத்த முடியும் ஆனால், புதுச்சேரியில்நடத்த முடியாது. காங்கிரஸ்தான் அதற்குக் காரணம். இதற்காக மக்கள் அந்த கட்சிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸை தாக்கிப் பேசினார்.
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் பேசியபோது, கூட்டத்தினர் கைதட்டி ரசித்தனர்.
ALSO READ | உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR