வாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு

கோவைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க கொங்கு பாஷையில் 'வாங்க மோடி வணக்கங்க மோடி' பாடலை பா.ஜ.க கட்சியினர் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 24, 2021, 08:14 PM IST
  • டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி, ராணுவ ஹெலிகாப்டரில் காலை 11 மணிக்கு புதுவைக்கு செல்கிறார்.
  • ஜிப்மரில் கட்டப்பட்டுள்ள ரத்த வங்கி மகளிர் விடுதி உள்ளிட்ட சில வளாகங்களையும் திறந்து வைப்பார்.
வாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு title=

தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மற்றும் அரசு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை, அதாவது பிப்ரவரி 25ம் தேதி, புதுவை மற்றும் கோவை வருகிறார். 

கோவைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க கொங்கு பாஷையில் 'வாங்க மோடி வணக்கங்க மோடி' பாடலை பா.ஜ.க கட்சியினர் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

கோவையில், கொடிசியா மைதானத்தில் நாளை மாலை 5:00 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதனை அடுத்து அவரை வரவேற்க கொங்கு தமிழில்  “வாங்க மோடி வணக்கங்க மோடி”  என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் முயற்சியில் இந்த பாடல் உருவாகியுள்ளது. 

அதில் 'வாங்க மோடி வணக்கங்க மோடி' என்ற முதல் வரியை அகில இந்திய பொது செயலர் சி.டி.ரவி, பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்,  இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம் ஆகியோர் பாடி உள்ளனர். வானதி ஸ்ரீநிவாஸனும் சில வரிகளை  பாடியுள்ளார். 

முன்னதாக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி (PM Narendra Modi), அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் காலை 11 மணிக்கு புதுவைக்கு செல்கிறார். அங்கு அவர் விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ள  4 வழிப்பாதை, சீர்காழி -நாகப்பட்டினம் இடையிலான 36 கி.மீ. சாலை ஆகிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

காரைக்காலில் ரூ.491 கோடியில் கட்டப்பட உள்ள ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடங்கி வைப்பார். புதுவை துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் துறைமுக மேம்பாட்டு பணியுடன், உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டரங்கில் ரூ.78 கோடியில் தடகள போட்டிக்கான டிராக் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

இது தவிர ஜிப்மரில் கட்டப்பட்டுள்ள ரத்த வங்கி மகளிர் விடுதி உள்ளிட்ட சில வளாகங்களையும் திறந்து வைப்பார்.
பின்னர், தனி விமானம் மூலம் கோவை செல்லும் பிரதமர், கப்பல் போக்குவரத்துத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, மின் துறை, தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, பல்வேறு திட்டங்களை தொடக்கியும் வைக்கிறார்.

பிரதமரின் வருகையை ஒட்டி சென்னை, புதுச்சேரி கோவை , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ | உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News