போலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை

போலியாக கற்பழிப்பு புகார் அளித்த மாணவி தற்கொலை செய்துக் கொண்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாதை சேர்ந்த மாணவி, 2 வாரங்களுக்கு முன்னதாக அளித்த புகாரில், தான் கடத்தப்பட்டு, வன்புணர்வு செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.  

Written by - ZEE Bureau | Last Updated : Feb 25, 2021, 07:22 AM IST
  • போலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை
  • கடத்திய ஆட்டோ டிரைவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி புகார்
  • போலீஸ் விசாரணையில் பொய் அம்பலமானது
போலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை

ஹைதராபாத்: போலியாக கற்பழிப்பு புகார் அளித்த மாணவி தற்கொலை செய்துக் கொண்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாதை சேர்ந்த மாணவி, 2 வாரங்களுக்கு முன்னதாக அளித்த புகாரில், தான் கடத்தப்பட்டு, வன்புணர்வு செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.  

ஆட்டோ டிரைவர் ஒருவர் தன்னை கடத்திச் சென்றதாகவும் (kidnapping), கூட்டு பாலியல் வன்புணர்வு (rape) செய்யப்பட்டதாகவும் மாணவி  குற்றம் சாட்டியது பொய் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஹைதராபாதைச் சேர்ந்த 19 வயது மாணவி ஃபார்மஸி படித்துவந்தார். 

அவர் அளித்த புகார் பொய் என்ற விஷயம் அம்பலமானதில் இருந்து அவர் ஹைதராபாத் புறநகரில் உள்ள கட்கேசரில் உறவினரின் வீட்டில் தங்கியிருந்தார். அங்கு மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.  

Also Read | புஜாரா இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்ற அமித் ஷாவின் விருப்பம் டக் அவுட் ஆனது 

தகவலறிந்த ராச்சகொண்டா போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. "ஆரம்ப விசாரணையில் அவர் ஏராளமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக தெரியவந்தது," என்று போலீசார் தெரிவித்தனர். அவர் அளித்த புகார் போலியானது என்பது அம்பலமானதால், 19 வயது மாணவி அவமானத்தில் மனசோர்வடைந்து இருந்ததாக  கூறப்படுகிறது.

தற்போது வழக்குப் பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு நடத்தும் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.  

19 வயது சிறுமி வீட்டை விட்டு ஓடிப்போவதற்காக ஒரு கட்டுக்கதையை இரு வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். பிப்ரவரி 10 ம் தேதி தங்கள் மகளைக் காணவில்லை என்று மாணவியின் குடும்பத்தினரிடமிருந்து போலீசாருக்கு அழைப்பு வந்தது.

Also Read | TN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின்   வேலைநிறுத்தப் போராட்டம்   

இரண்டு மணி நேரம் கழித்து அவர் அன்னோஜிகுடா ரயில்வே கேட் (Railway Gate) அருகே ஒரு சாலையில் அரை நிர்வாண நிலையில் காணப்பட்டார், அவரால் நடக்க முடியவில்லை.

மாலை தான் கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் போது ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரால் கடத்தப்பட்டதாக அந்த மாணவி தெரிவித்தார். விசாரணையில் இறங்கிய போலீசார், அடுத்த மூன்று நாட்களில் போலீசார் (police) மாணவியின் கல்லூரிக்கு அருகிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை (CCTV) பகுப்பாய்வு செய்தனர். மாணவி சொல்வதில் பல முரண்பாடுகள் காணப்பட்டன.

Also Read | பெளர்ணமி தினத்தின்  முக்கியத்துவம் என்ன? பவுர்ணமியின் சிறப்பு தெரியுமா?

நண்பர்களுடன் தன்னை ஒரு ஆட்டோ டிரைவர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி தெரிவித்திருந்தார். மாணவியால் அடையாளம் காட்டப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபரின் ஆட்டோவில் மாணவி ஏறவில்லை என்பதை சி.சி.டி.வி காட்சிகள் அம்பலப்படுத்தின. அதோடு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காட்டுவதற்காக, தனது ஆடைகளை தானாகவே அகற்றிவிட்டார் என்றும் போலீசார் கண்டுபிடித்தனர். காவல்துறையினர் வருவதற்கு முன், தானாகவே புதரில் விழுந்ததால் காலில் காயம் ஏற்பட்டது.

இந்த விஷயங்களை விசாரணையில் அந்த மாணவி ஒப்புக்கொண்டார். அதுமட்டுமல்ல, சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு தனது சகோதரர் கடத்தப்பட்டதாகவும் (kidnapped), பெரிய தொகை ஒன்றை கொடுத்து மீட்டதகாவும் நண்பர்களிடம் பொய் சொன்னதாகவும், போலீசாரின் விசாரணையில்  தெரியவந்தது.

ALSO READ | உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

More Stories

Trending News