புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநராக பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள் தமிழிசை சௌந்தரராஜன் ஆளும் கட்சியை தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். பிப்ரவரி 22 அன்று மாலை 5 மணிக்கு பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டார். புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அரசு, சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. தற்போது, ​​ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி இரண்டுமே தலா 14 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, என் ரங்கசாமி மற்றும் பிற எம்.எல்.ஏக்கள் உட்பட 13 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுநரிடம் கடிதத்தை சமர்ப்பித்தனர். 4 காங்கிரஸ் (Congress) சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததாலும், மற்றொரு உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலும் வி நாராயணசாமி தலைமையிலான அரசாங்கம் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டது. கடிதத்திற்கு பதிலளக்கும் விதமாக, தமிழிசை, தலைமைச் செயலாளருக்கும், டி.ஜி.பிக்கும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு உத்தரவிட்டார்.


இன்று காலை தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan) புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மக்களின் ஆளுநராகவும் அரசியலமைப்பின் படியும் நான் செயல்படுவேன் என்று அவர் கூறினார்.


ALSO READ: புதுவை கவர்னர் கிரண் பேடி நீக்கம்; தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு


எதிர்க்கட்சித் தலைவரான ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசியது, குறிப்பாணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமியிடம் கோரப்பட வேண்டும் என தாங்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார்.


இந்த வார தொடக்கத்தில், புதுச்சேரியின் லெப்டினன்ட் ஆளுநராக கிரண் பேடி (Kiran Bedi) நீக்கப்பட்டார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கூடுதல் பொறுப்பு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது. அவர் இன்று முறையாக பதவியேற்றார்.


புதுச்சேரியின் ஆளுநராக செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கான நியமன உத்தரவு தனக்கு கிடைத்ததாக தமிழிசை சௌந்தரராஜன் ட்வீட் செய்துள்ளார்.


ALSO READ: மக்கள் விருப்பத்தை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் அரசு எங்கள் அரசு: தமிழக முதல்வர்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR