பல அழகிய திரைப்பாடல்களை நம் கண் முன் நிறுத்திக் கொண்டிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். தனது 72வது பிறந்தநாளை கொண்டாடும் S.P.பாலசுப்ரமணியனுக்கு ட்விட்டர் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1966-ல் திரைப்பாடல்கள் பாடி தனது பயணத்தை தொடங்கினார். இதையடுத்து, நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். 


திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். 


60-களில் தொடங்கிய இவரது இசைப் பயணம் நான்கு தலைமுறை நடிகர்களுக்குப் பின்னணி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமையுடன் அரை நூற்றாண்டைக் கடந்தும் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடும் எஸ்.பி.பி.இன்றும் அதே இளமைத் துள்ளலுடன் தொடர்கிறது. இதையடுத்து இவருடைய பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்!