அரிய வகை கருப்பு-கால் ஃபெரெட்டை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குளோன் செய்துள்ளனர். இந்த ஆராய்சி, மனிதர்களின் க்ளோனிங்கும் சாத்தியமா என்ற கேள்விகளை எழுப்புகிறது.
 
பல காலத்திற்கு முன்னதாக இறந்த காட்டு விலங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட உறைந்த செல்களைப் பயன்படுத்தி, அரிய வகை உயிரினமான ஃபெரெட் என்ற விலங்கை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குளோன் செய்துள்ளனர். அமெரிக்காவில் இதுபோன்று க்ளோனிங் முதல் உயிரினம் இதுதான்.
 
வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட அரிய வகை உயிரினத்தின் முதல் குளோனிங்கில் உருவாக்கப்பட்டுள்ள உயிரினம் Elizabeth Ann. இது உயிரினங்களுக்கு தேவையான மரபணு வேறுபாட்டைக் கொண்டு வருவதற்கு உதவும் ஆராய்ச்சியாக இருக்கக்கூடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Also Read | சமோலி வெள்ளத்திற்குப் பிறகு உத்தராகண்ட்டில் உருவான அற்புதமான இயற்கை ஏரி


மரபணு பன்முகத்தன்மை மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிப்பதன் நோக்கமாகக் கொண்ட இந்த க்ளோனிங் விஞ்ஞானிகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
இந்த முயற்சிகள், டிசம்பர் 10 தேதியன்று சிறப்பான முன்னேற்றத்தை கொடுத்தன.


விஞ்ஞான முயற்சிகளில் புது அவதாரம் எடுத்திருக்கும் எலிசபெத் ஆன், 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கருப்பு-கால் ஃபெரெட் இனத்தை சேர்ந்ததாக, அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவை (US Fish and Wildlife Service) தெரிவித்துள்ளது.


"இந்த ஆராய்ச்சி ஆரம்பக்கட்டத்தில் தான் இருக்கிறது என்றாலும், இது வட அமெரிக்காவின் அரிய வகை உயிரினத்தின் முதல் குளோனிங் ஆகும். இது ஆய்வுகளின் தொடர் முயற்சிகளுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது" என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மவுண்டன்-ப்ரைரியின் (Service's Mountain-Prairie Region) இயக்குனர் நோரீன் வால்ஷ் தெரிவித்தார்.  


Also Read | 5000 ஆண்டு பழமையான, 22,400 லிட்டர் பீர் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு


அசல் காட்டு விலங்குகளில் ஏழு மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன. இது உயிரினங்களின் மரபணு வேறுபாட்டிற்கு வரம்புகளை வைக்கிறது. அதோடு, மாறிவரும் சூழல்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. அதிகரித்துவரும் நோய் அச்சுறுத்தல்கள் கவலைகளையும், சவால்களை உருவாக்குகிறது. எனவே இது போன்ற மரபணு ஆராய்ச்சிகளின் தேவை அதிகரித்துள்ளது.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR