குலசேகரன்பட்டினம்: இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளத்தை தமிழ்நாட்டில் நிர்மாணிப்பதற்காக 2,350 ஏக்கரில் 1,950 நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது., நாட்டின் விண்வெளித் திட்டத்திற்காக இந்தியா உருவாக்கி வரும் இரண்டாவது விண்வெளித் தளமாக  தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் உருவாகிவருகிறது. தென்னிந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டா சிறந்த ஏவுதளமாக இருக்கும் நிலையில், இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளம் தமிழகத்தின் குலசேகர பட்டிணத்தில் அமைக்கப்படுகிறது. இதற்காக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் தகவல்களை தெரிவித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழக அரசின் மூலம் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.


மேலும் படிக்க | சூரிய எரிப்பினால் இன்று ஜிபிஎஸ் சேவைகள் பாதிக்கப்படலாம்


குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி தளத்திற்கு தேவையான அத்தியாவசிய கட்டமைப்புகளை நிறுவுவதை மேற்பார்வையிடவும், ஏவுதல் தொடர்பான முக்கியமான செயல்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் தற்போதுள்ள மனிதவளத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் கூறினார்.


நாட்டின் இரண்டாவது விண்வெளித் தளத்திற்கான அடிப்படை பணிகள் நிறைவடைந்ததும், அதன் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான மனிதவளத் தேவை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.



இரண்டாவது விண்வெளி நிலையம் 2024 அல்லது 2025க்குள் ஏவுவதற்கு தயாராக இருக்கும் என்று இஸ்ரோ மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிற்கு ஏன் புதிய விண்வெளி நிலையம் தேவை?


இந்தியாவில் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ஏவுதளங்களுடன் கூடிய விண்வெளி நிலையம் இயங்குகிறது. 1970களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட இந்த விண்வெளி நிலையம் சிறந்த ஏவுதளமாக பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. 


மேலும் படிக்க | ஏலியன்கள் பூமியை சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்களா? அதிரவைக்கும் ஆய்வு


கடலுக்கு சற்று அருகில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் கிழக்கு நோக்கி பறந்து, கடலுக்கு மேலே செல்வதால், எதேனும் விபத்துகள் ஏற்பட்டால், ராக்கெட் மற்றும் அவற்றின் சிதைபாடுகள் கடலில் மட்டுமே விழும் என்பதால் பேரழிவு தவிர்க்கப்படுகிறது. 


ஸ்ரீஹரிகோட்டா கனமான ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஏற்றதாக இருந்தாலும், 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. துருவ சுற்றுப்பாதையில் (துருவங்களுக்கு மேலே பூமியைச் சுற்றி வரும்) ராக்கெட்டுகள் செலுத்தப்படும் போது, அது அண்டை நாடான இலங்கையை கடந்து செல்ல வேண்டும்.


அண்டை நாட்டின் மீது செல்வதால் ஏற்படும் தவிர்ப்பதற்காக, ராக்கெட் நேர்கோட்டில் பறக்காமல், வளைந்த பாதையில் சென்று திருப்பம் எடுக்க வேண்டியிருக்கிறது. இதற்கு மிகவும் அதிகமாக எரிபொருள் செலவாகிறது. அதிலும் SSLV போன்ற சிறிய ராக்கெட்டுகள் அதிக எரிபொருளை செலவு செய்வதால், ராக்கெட்டின் பேலோட் சுமந்து செல்லும் திறன் குறைகிறது என்பதால், மாற்று விண்வெளி ஏவுதளம் அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.  


மேலும் படிக்க | செயற்கை கட்டிடத்தில் இயற்கையாக எதிரொலிக்கும் பிரபஞ்ச ரகசிய வீடியோ வைரல்


தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. இங்கிருந்து ஏவப்படும் ​​SSLV போன்ற சிறிய ராக்கெட்டுகளும்,  இந்திய ஸ்டார்ட்-அப்களால் உருவாக்கப்படும் ராக்கெட்டுகளும் எரிபொருளை வீணாக்காமலே, நேராகப் பறக்க முடியும். 


சிறிய ராக்கெட்டுகளை உருவாக்குவது, ஒன்றிணைப்பது, ஏவுவது எளிதானது என்பதால், சிறிய ராக்கெட்டுகளுக்காக ஒரு பிரத்யேக விண்வெளி நிலையம் இருப்பது இந்தியாவிற்கு முக்கியம் என்பதன் அடிப்படையில் புதிய விண்வெளி ஏவுதளம் அமைக்கப்படுகிறது.


குறைந்த செலவில் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த விரும்பும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறிய ராக்கெட்டுகள் கவர்ச்சிகரமானவை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இனி தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் ராக்கெட்டுகள் ஏவப்படும் வாய்ப்புகள் அதிகரித்துவிட்டது. 


மேலும் படிக்க | பல் துலக்க பயன்படும் ரோபோ: விரைவில் உங்கள் பயன்பாட்டுக்கு வரும் மைக்ரோபேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ