GPS ALERT: சூரிய எரிப்பினால் இன்று ஜிபிஎஸ் சேவைகள் பாதிக்கப்படலாம்

Solar Flare Alert: சூரியனில் இருந்து ஜூலை 14 வெடித்த சூரிய எரிப்பு இன்று பூமியை நெருங்குகிறது... இதனால் தொழில்நுட்ப சாதனங்கள் சேதமடையலாம், செல்போன்கள் மற்றும் ஜிபிஎஸ் சேவைகள் பாதிக்கப்படலாம்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 19, 2022, 07:34 AM IST
  • சூரியனில் இருந்து ஜூலை 14 வெடித்த சூரிய எரிப்பு இன்று பூமியை நெருங்குகிறது
  • இதனால் தொழில்நுட்ப சாதனங்கள் சேதமடையலாம்
  • செல்போன்கள் மற்றும் ஜிபிஎஸ் சேவைகள் பாதிக்கப்படலாம்
GPS ALERT: சூரிய எரிப்பினால் இன்று ஜிபிஎஸ் சேவைகள் பாதிக்கப்படலாம் title=

புதுடெல்லி: நமது சூரியன் பூமியில் உள்ள அனைத்து ஆற்றலுக்கும் ஆதாரமாக உள்ளது. நமது ஆதார நட்சத்திரமான சூரியனே, நமது வாழ்க்கைக்கு ஆதாரம் என்றாலும் அதன் ஒரு சிறிய அசாதரண செயலும் பூமியில் பெரிய இடையூறுகளை ஏற்படுத்தும். தற்போது, ஒரு சூரிய எரிப்பு பூமியை நோக்கி வருகிறது, அது பூமியில் வசிக்கும் நமக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National  National Oceanic and Atmospheric Administration (NOAA)) சூரியனில் இருந்து ஜூலை 14 வெடித்த சூரிய எரிப்பு குறித்து எச்சரிக்கை எழுப்பியுள்ளது.

"சோலார் ஃப்ளேர் என்பது சூரிய புள்ளிகளுடன் தொடர்புடைய காந்த ஆற்றலின் வெளியீட்டில் இருந்து வரும் கதிர்வீச்சின் தீவிர வெடிப்பு ஆகும். நமது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய வெடிக்கும் நிகழ்வுகளான அவை சூரியனில் பிரகாசமான பகுதிகளாகக் காணப்படுகின்றன, மேலும் அவை சில நிமிடங்கள் முதல் மணிநேரம் வரை நீடிக்கும்" என்று நாசா தெரிவித்துள்ளது.

இது நமது செல்போன், ஜி.பி.எஸ் சிக்னல்களை பாதிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர, வேறு சேதங்களும் ஏற்படுமா என்ற கவலைகளும் எழுகின்றன.

மேலும் படிக்க  | விண்வெளி போருக்கு தயாராகிறது சீனா, எச்சரிக்கும் அமெரிக்கா

இந்த சூரிய எரிப்பானது மனிதகுலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது என்றாலும், நமது செயற்கைக்கோள்களை செயலிழக்கச் செய்யும் அளவில் இருக்கலாம். இல்லாவிட்டால் குறைந்தபட்சம், பூமியின் பல செயல்பாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

பூமியின் காந்தப்புலம் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சிலிருந்து நம்மைக் காக்கும் என்பதால் நாம் பாதுகாப்பாக இருப்போம். ஆனால் பூமியில் உள்ள தகவல்தொடர்புகளில் ஏற்படும் இடையூறுகள் நவீன வாழ்க்கையின் தொழில்நுட்ப வசதிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். 

மேலும் படிக்க | பூமியை நோக்கி வேகமாக வரும் மாபெரும் வால் நட்சத்திரம்

"நீண்ட பாம்பு போன்ற இழை அற்புதமாக சூரியனிலிருந்து விலகிச் சென்றது. இந்த பூமியை இயக்கும் சூரியபுயலின் காந்த நோக்குநிலையை கணிப்பது கடினமாக இருக்கும். காந்தப்புலம் என்றால் G2-நிலை (சாத்தியமான G3) நிலைமைகள் ஏற்படலாம். இந்த காந்தப் புயல் தெற்கு நோக்கி நகர்கிறது!" என்று டாக்டர் தமிதா ஸ்கோவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

விண்வெளி வானிலை நிபுணர் தமிதா ஸ்கோவின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

ஜூலை 14-ம் தேதி சூரியனில் இருந்து வெளிப்பட்ட சூரிய எரிப்பு, ஜூலை 19-ம் தேதி பூமியைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இன்று தாக்கும் இந்த சூரிய எரிப்பினால் தொழில்நுட்ப சேவைகளில் குறைபாடு ஏற்படலாம். அல்லது 

மேலும் படிக்க | பால்வீதியின் மிகப்பெரிய கருந்துளையில் கசிவு NASA தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News