Super Blood Moon 2021: முழு சந்திர கிரகணம் - ரத்த நிலவு எப்போது, எங்கே, எப்படி பார்ப்பது?
சூப்பர் மூன் மற்றும் முழு சந்திர கிரகணம் என இரண்டு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நிகழ்வதால், இதை ஓர் அரிய நிகழ்வு என நாசா தெரிவித்துள்ளது.
Lunar Eclipse Updates: மே 26 அன்று (புதன்கிழமை) இந்த ஆண்டின் மிகப்பெரிய "சூப்பர்மூன்" (Supermoon) நிகழவிருக்கிறது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு ஆண்டுகள் கழித்து ஏற்படும் முழு சந்திர கிரகணமாகும். இந்த சந்திர கிரகணத்தின் போது, சூரிய ஒளி புவியின் வளி மண்டலத்தின் வழியாக பயணித்து, நிலவை சென்றடைகிறது. எனவே நிலவு இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மின்னுவதால், "இரத்த நிலவு" என்று அழைக்கப்படுகிறது. சூரிய அஸ்தமனத்தை ஒத்த பூமியின் வளிமண்டலத்தில் இருந்து வெளிச்சம் சிதறடிக்கப்படுவதால் தூசுகளும் மேகங்களும் ஒன்றாக சூழ்வதால், சந்திரன் அதிக அளவில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனால் தான் சூப்பர் ப்ளட் மூன் (Super Blood Moon) என்றும் அழைப்படுகிறது.
சந்திர கிரகணம் என்றால் என்ன (What is a lunar eclipse)
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வின் போது பூமியின் நிழலால் நிலவு மூடப்பட்டிருக்கும். பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் அளவை பொறுத்து சந்திர கிரகணங்களின் வகைகள் வேறுபடுகின்றனர்.
சந்திர கிரகணங்களில் மூன்று வகைகள் உள்ளன
1. பெனும்பிரல் கிரகணம்,
2. பகுதி சந்திர கிரகணம்
3. மொத்த சந்திர கிரகணம்.
ALSO READ | முழு சந்திர கிரகணம் இந்தியாவில் எந்தெந்த பகுதிகளில் பார்க்கலாம் -விவரம்
"சூப்பர் பிளட் மூன்" என்றால் என்ன (What is Super Flower Blood Moon)
மே மாதத்தின் மொத்த சந்திர கிரகணத்தின் போது சிவப்பு நிறத்தில் தோன்றுவதோடு கூடுதலாக, சந்திரன் பெரிஜியில் இருக்கும், அதாவது அதன் சுற்றுப்பாதை பாதையின் ஒரு பகுதியாக இது பூமிக்கு மிக அருகில் இருக்கும். இந்த நிகழ்வு "சூப்பர் மூன்" என்றும் அழைக்கப்படுகிறது. வானியலாளர்களின் கூற்றுப்படி, சந்திரன் இயல்பை விட 7 சதவீதம் பெரியதாகவும், 15 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மே மாதத்தின் முழு நிலவு வசந்த காலத்தில் ஏற்படுவதால் "ஃப்ளவர் சந்திரன்" (Flower Moon) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விஷயங்கள் அனைத்தும் ஒன்றாக நிகழும்போது, இந்த நிகழ்வை "சூப்பர் ஃப்ளவர் பிளட் மூன்" (Super Flower Blood Moo) என்று அழைக்கப்படுகிறது.
மே 2021 சந்திர கிரகணம் எப்போது தெரியும்:
சந்திர கிரகணத்தின் நிகழ்வு இந்தியாவில் பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி மாலை 6.23 மணிக்கு முடிவடையும். அதேபோல முழு சந்திர கிரகணம் மாலை 4.41 முதல் 4.58 மணிகிகி இடைப்பட்ட நேரத்தில் நிகழும் புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences) தெரிவித்துள்ளது
இந்தியாவில் எங்கு சந்திர கிரகணம் தெரியும்:
அகர்தலா, ஐஸ்வால், கொல்கத்தா, செரபுஞ்சி, கூச் பெஹார், டயமண்ட் ஹார்பர், திகா, குவஹாத்தி, இம்பால், இட்டாநகர், கோஹிமா, லும்டிங், மால்டா, வடக்கு லக்கிம்பூர், பரேடி, பாஷிகாட், பிளேக் ஷில்லாங், சிப்சாகர் மற்றும் சில்சார். ஆனால் சென்னையில் நிலவு 6.32 மணிக்கு தான் உதயமாகும் என்பதால், அதற்குள் சந்திர கிரகணத்தின் நிகழ்வு முடிவடைந்துவிடும்.
ALSO READ | இந்த 4 விஷயங்களை செய்து உங்களுக்கான செல்வம், மரியாதையை அதிகரியுங்கள்!
மே 2021 சந்திர கிரகணத்தின் நேரடியாக ஒளிபரப்பை எங்கே பார்ப்பது (Where to watch Lunar Eclipse live stream)
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கிரிஃபித் ஆய்வகம் (Griffith Observatory) நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நேரலை காலை 08:45 மணிக்கு தொடங்க உள்ளது. தெற்கு வானியல் சங்கம் ( Astronomical Society of South) காலை 09:30 மணிக்கு பேஸ்புக் மற்றும் யூடியூபில் தொடங்கும் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பவுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR