முழு சந்திர கிரகணம் நாளை- இந்தியாவில் எந்தெந்த பகுதிகளில் பார்க்கலாம்

மே 26ம் தேதி அதிகாலை 4.19 மணி வரை சுவாதி பின்னர் விசாக நட்சத்திரம் நடக்க உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 25, 2021, 09:28 PM IST
முழு சந்திர கிரகணம் நாளை- இந்தியாவில் எந்தெந்த பகுதிகளில் பார்க்கலாம் title=

சந்திர கிரகணத்தை நாட்டில் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை காண முடியும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த முழு சந்திர கிரகணத்தை சிக்கிம் தவிர்த்து வடகிழக்குப் பகுதிகள், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் சில கடற்கரைப் பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் காணலாம்.

சூரியன் - சந்திரனுக்கு இடையே பூமி அதே நேர்கோட்டில் வருவதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் நிகழ்வு தான் நாம் சந்திர கிரகணமாக (Lunar eclipse) காண்கிறோம். 2021ம் ஆண்டிற்கான சந்திர கிரகணம் நாளை மே 26ம் தேதி நிகழ்கிறது. இந்த கிரகணத்தின் போது சந்திரன் 101.6 சதவீதம் மறையும். 

ALSO READ | இந்த 4 விஷயங்களை செய்து செல்வம், மரியாதையை இந்த சந்திர கிரகணத்தில் அதிகரியுங்கள்....

இந்த கிரகணம், இந்திய நேரப்படி மதியம் 2.17 மணி முதல் இரவு 7.19 மணி வரை நடைப்பெற உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் கிரகணத்தைப் பார்க்க முடியாது.

கிரகண நேரத்தில் என்ன செய்யக்கூடாதது
கிரகணத்தின் போது உணவு, நீர் அருந்துதல் கூடாது என கூறப்படுகிறது. கர்ப்பிணிகள் அவர்களின் உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் சொரிந்தால், அந்த இடத்தில் குழந்தைக்கு கருப்பாக அல்லது ஏதேனும் அடையாளம் தோன்றும் என கூறப்படுகிறது. இந்த நேரத்தில் கண்டிப்பாக உடலுறவு வைத்துக் கொள்ளுதல் கூடாது. கிரகண நாளிலாவது கிரகணத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டுவிட வேண்டும்.

சந்திர கிரகணம் எந்த நட்சத்திரத்தில் ஏற்படுகிறது
துலாம் மற்றும் விருச்சிக ராசியில் இருக்கும் குருவை அதிபதியாக கொண்ட விசாக நட்சத்திரத்தில் இந்த சந்திர கிரகண நிகழ்வு நடைபெறுகிறது.

அதனால் விசாகம் நட்சத்திர (பாதம் 1,2,3) - துலாம் ராசி, விசாகம் நட்சத்திர (பாதம் 4) - விருச்சிகம் ராசி, புனர்பூசம் (பாதம் 1,2, 3) - மிதுனம் ராசி, புனர்பூசம் (பாதம் 4) - கடகம் ராசி, பூரட்டாதி நட்சத்திர (பாதம் 1,2,3) - கும்பம் ராசி, பூரட்டாதி நட்சத்திர (பாதம் 4) - மீனம் ராசி. மேலும் குரு ஆளக்கூடிய தனுசு மற்றும் மீன ராசியினர் இந்த சந்திர கிரகண நிகழ்வால் பரிகாரம் செய்ய வேண்டும்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News