NASA ALERT: பூமியை நோக்கி வரும் 4 சிறுகோள்கள்! மோதினால் என்ன ஆகும்?
4 Asteroids Comes Close To Earth: பூமியை நோக்கிச் சுழன்று வரும் ஆபத்தான நான்கு சிறுகோள்கள் பூமியை தாக்கக்கூடும் என்று நாசா தெரிவித்துள்ளது...
பூமியை நோக்கிச் வரும் ஆபத்தான நான்கு சிறுகோள்கள் இன்று தாக்கக்கூடும் என்று நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் கூற்றுப்படி, இன்று பூமியின் மேற்பரப்புக்கு மிக அருகில் வரவிருக்கும் நான்கு சிறுகோள்களால் உலகில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படலாம். ஏனெனில் ஒன்றல்ல, பூமியை நோக்கி பயங்கர வேகத்தில் வந்து கொண்டிருக்கும் நான்கு ஆபத்தான சிறுகோள்கள் இவை என்பதும், அவற்றில் சில ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வேகத்தில் பயணிக்கின்றன என்பதும் கவலை அளிக்கிறது. ஆனால் ஆறுதல் தரும் செய்தியாக, அவற்றில் சில பூமியைத் தாக்காது என்றும், நம்மைக் கடந்து பறக்காது என்று நாசா தெரிவித்துள்ளது.
சிறுகோள்கள் அடிப்படையில் சூரிய மண்டலத்தின் சிறிய கோள்கள் மற்றும் வளிமண்டலம் இல்லாத பாறை, பனிக்கட்டி அல்லது உலோகங்களால் உருவானவை.பெரும்பாலான சிறுகோள்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவற்றின் வடிவங்களும் அளவும், எடையும் கணிசமாக வேறுபடுகின்றன, 1 மில்லியன் பாறைகள் கொண்ட சிறுகோள் முதல் கிட்டத்தட்ட 1000 கிமீ விட்டம் கொண்ட குள்ள கிரகம் வரை பல்வேறு அளவுகளில் சிறுகோள்கள் உள்லன.
இது போன்ற ஒரு சிறுகோள் ஏற்கனவே கனடாவில் பூமிக்கு மேல் பறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப முடியாதா?
பூமியை நோக்கிச் செல்லும் நான்கு சிறுகோள்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்...
சிறுகோள் 2005 LW3
இதுவே மிகப்பெரிய சிறுகோள் மற்றும் நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் சிறுகோள் ஆகும். 2005 LW3 என பெயரிடப்பட்ட இந்த மிகப்பெரிய சிறுகோள் தொடர்பாக நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் (NASA's Planetary Defense Coordination Office) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சிறுகோள் மிகப்பெரியது, அதன் அளவு 426 அடி முதல் 918 அடி வரை இருக்கும். இது, நமது பூமி கிரகத்தை நோக்கி மணிக்கு 48580 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பது வந்துக் கொண்டிருப்பதாகாவும், இன்று (நவம்பர் 25) பூமியை தாக்கலாம் என்றும் நாசா எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க | மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் 'Artemis 1' ராக்கெட்
சிறுகோள் 2022 WS2
இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வருவதால் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. 39 அடி முதல் 88 அடி வரையிலான அளவு கொண்ட இந்த சிறுகோள், பூமிக்கு மிக அருகில் நெருங்கி வரும். இது பூமியிலிருந்து 3 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில், மணிக்கு 42039 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.
சிறுகோள் 2022 WR2
இந்த மற்றொரு சிறுகோள், பூமியில் இருந்து வெறும் 3.5 கிலோமீட்டர்கள் தொலைவில் வரும். மணிக்கு 27629 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த சிறுகோள் மிகவும் சிறியது என்பதால் பூமியில் மோதியாலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
சிறுகோள் 2022 WL2
பூமியின் மேற்பரப்பைத் தாக்கும் இந்த வாரத்தின் நான்காவது சிறுகோள் இதுவாகும். இதன் அளவு 29 அடி முதல் 65 அடி வரை இருக்கும். இது பூமிக்கு மிக அருகில் 2.2 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் வரும். இது ஒரு மணி நேரத்திற்கு 28980 கிலோமீட்டர் மின்னல் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது, இது ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையின் வேகத்தை விட இரண்டு மடங்கு வேகம் கொண்டது.
மேலும் படிக்க | நெப்டியூனின் அழகை மட்டுமல்ல ரகசியங்களையும் அவிழ்க்கும் ஜேம்ஸ் வெப்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ