விண்வெளியில் மாயமானது மிகப்பெரிய Black hole: பதட்டத்தில் விஞ்ஞானிகள்!!
கேலக்சியில் எங்கிருந்தோ வெளிப்படும் ஒரு பேராற்றல் வாய்ந்த சக்தி இந்த மிகப்பெரிய கருந்துளை வெளியேறுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விஞ்ஞானிகளைத் தொடர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பல விஷயங்கள் நம் பிரபஞ்சத்தில் உள்ளன. அவற்றில் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளைகள் மிக முக்கியமானவை. பல விண்வெளிப் பொருட்கள் மற்றும் அம்சங்களைப் பற்றிய மர்மங்கள் இன்னும் நீங்காமல் உள்ளன. இப்போது, ஒரு அண்ட நிகழ்வு வானியலாளர்களை உலுக்கியுள்ளது!
ஆம்!! தொலைதூரத்தில் இருந்த ஒரு விண்மீன் பேரடை அதாவது கேலக்சியில் அமைந்திருப்பதாக முன்னர் நம்பப்பட்ட ஒரு மிகப்பெரிய கருந்துளை திடீரென மறைந்துவிட்டது.
“A2261-BCG” என அழைக்கப்படும் கேலக்சி அதன் கருந்துளையை இழந்துவிட்டதாக தெரிகிறது. விஞ்ஞானிகள் (Scientists) இப்போது அந்த கருந்துளை விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கக் கூடும் என்று நம்புகிறார்கள். அப்படியானால் இது போன்ற முதல் நிகழ்வாக இது பதிவு செய்யப்படும்.
இதற்கு முன்னர் மனிதர்களால் கண்டறியப்பட்ட எந்த கருந்துளையும் மறைந்ததாக பதிவோ குறிப்போ இல்லை. மறைந்திருக்கும் முதல் கருந்துளையான A2261-BCG தற்போது பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
கேலக்சியில் (Galaxy) எங்கிருந்தோ வெளிப்படும் ஒரு பேராற்றல் வாய்ந்த சக்தி இந்த மிகப்பெரிய கருந்துளை வெளியேறுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கருந்துளையை வெகு தொலைவிற்கு தள்ளும் அளவுக்கு அந்த சக்தி ஆற்றல் மிக்கதாக இருந்திருக்கும்!
வட அமெரிக்காவின் (America) பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியாளர்கள் இந்த விண்வெளி நிகழ்வைக் கண்டனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு கேலக்சியின் மையத்திலும் குறைந்தது ஒரு பெரிய கருந்துளையாவது இருக்கிறது. இது நமது பூமி உள்ள மில்கிவே எனப்படும் பால்வழியிலும் உள்ளது.
ALSO READ: OMG: Eiffel Tower அளவிலான asteroid பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கிறது!!
சமீபத்தில், மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஒரு குழு அமெரிக்க வானியல் சொசைட்டி ஜர்னலில் கருந்துளைகளை மறுவடிவமைப்பது குறித்து ஒரு ஆய்வை வெளியிட்டது.
டாக்டர் கெய்ஹான் குல்டெக்கின் தலைமையில், ஒரு கருந்துளை திடீரென காணாமல் போனதை குழு கண்டறிந்தது. எதிர்பாராத இந்த நிகழ்வு நடப்பதற்கு பல நாட்களுக்கு முன்னிருந்தே அவர் A2261-BCG கருந்தூளையைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்.
மதர்போர்டுடனான உரையாடலில், தொலைதூர கேலக்சியின் மையத்தில் எதையும் பார்க்க முடியவில்லை என்ற சந்தேகம் தனக்கு எழுந்ததாகவும், பின்னர், அங்கு எதுவும் இல்ல என்று தனக்கு ஊர்ஜிதமானதாகவும் அவர் கூறினார்.
அதைக் கவனித்த விஞ்ஞானிகள் குழுவும், கண்டுபிடிக்க முடியாத ஏதாவது இடத்தில் அந்த கேலக்சியிலேயே கருந்துளை எங்காவது மறைந்திருக்கக்கூடும் என்று நம்புகிறார்கள்.
ஒரு கருந்துளையை அதன் நிலையில் இருந்து தள்ளுவதற்கு ஒரு பெரிய சக்தி தேவைப்படுகிறது. மேலும் விஞ்ஞானிகள் இது இரண்டு மிகப்பெரிய கருந்துளைகளின் மோதல் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
அப்படியிருந்தும், இதை நிரூபிப்பது கடினமாக உள்ளது. ஏனெனில் இரண்டு மிகப்பெரிய கருந்துளைகளின் மோதலை நாம் இதுவரை கவனித்ததில்லை, அதற்கு எந்த சாட்சியும், பதிவும் இல்லை.
ALSO READ: தஞ்சை மாணவர் வடிவமைத்த செயற்கைக்கோள்களை NASA விண்ணில் செலுத்தும்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR