புவி காந்தப் புயல் விரைவில் பூமியைத் தாக்கலாம் Geomagnetic storm என்னும் சூரிய வெடிப்பின் விளைவு
புவி காந்தப் புயலாக மாறும் சூரிய வெடிப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி பூமியைத் தாக்கும்
ஒரு சூரிய புள்ளியில் இருந்து உருவான சுமார் 17 சூரிய வெடிப்புகள் பூமியை அடைய வாய்ப்புள்ளது. இது புவி காந்த புயல்களை ஏற்படுத்தும் என்றும், இது ஏப்ரல் 1 ஆம் தேதி பூமியைத் தாக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வெடிப்புகள் AR2975 எனப்படும் அதிகப்படியான சூரிய புள்ளியிலிருந்து தோன்றியவை. இந்த சூரிய புள்ளி மார்ச் 28 முதல் சூரிய எரிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்த விண்வெளி நிகழ்வானது, பூமியில் சில மிதமான வானப் புயல்களையும் ஏற்படுத்தக்கூடும் என்று Space.com தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | குள்ள கிரகம் புளூட்டோவில் பனி எரிமலைகள்
சூரிய புள்ளிகள் என்றால் என்ன?
சூரிய புள்ளிகள் என்பது சூரியனில் ஏற்படும் வெடிப்புகள் ஆகும், அவை காந்தக் கோடுகளாக மாறும். கண்ணுக்குத் தெரியும் மேற்பரப்புக்கு அருகில் திடீரென மறுசீரமைக்கும்போது ஏற்படும். சில நேரங்களில், இந்த வெடிப்புகள் கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் (CMEகள்) அல்லது விண்வெளியில் ஏற்படும் துகள்களின் ஸ்ட்ரீம்களுடன் தொடர்புடையவை.
நாசாவின் சக்தி வாய்ந்த சோலார் டைனமிக்ஸ் ஆய்வகம் சூரிய வெடிப்புகளின் திகைப்பூட்டும் காட்சிகளை படம் பிடித்தது.
"குறைந்தது இரண்டு, மூன்று, CME களை பூமியை நோக்கி வீசியுள்ளன" என்று நாசா மற்றும் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NASA and the National Oceanic and Atmospheric Administration), தெரிவித்ததாக SpaceWeather.com இணையதளம், இந்த நிகழ்வைப் பற்றி எழுதியது. முதல் CME குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) பூமியை வந்தடையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
துகள்கள் G2 அல்லது G3 (மிதமான) புவி காந்தப் புயல்களை உருவாக்கலாம் என்று மாடலிங் தெரிவிக்கிறது, இருப்பினும் இவற்றை கணிப்பது கடினம்.இந்த சாத்தியமான புயல் மிதமானதாக இருக்கும் போது கவனிக்க முடியும்,
நாசா மற்றும் பிற விண்வெளி நிறுவனங்கள் சூரிய வானிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்த சூரிய செயல்பாட்டை கண்காணிக்கின்றன.
பூமியை நோக்கிய ஒரு வலுவான எரிப்பு, ஒரு பெரிய CME உடன் சேர்ந்து, மின் இணைப்புகளை சேதப்படுத்துலாம் அல்லது செயற்கைக்கோள்களை முடக்குவது போன்ற சிக்கல்களைய்ம் ஏற்படுத்தலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR