Health Study: சைவ உணவு உண்பவர்களுக்கு நல்ல செய்தி! உங்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவு
இறைச்சி உணவு உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவு என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிரது.
இறைச்சி உணவு உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவு என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிரது.
ஒருவரின் உணவு பழக்கம் என்பது முற்றிலும் தனிப்பட்ட விருப்பம். ஆனால் சைவ உணவு உண்பவர்கள் பெரும்பாலும் இறைச்சி உண்பவர்களால் ட்ரோல் செய்யப்படுவார்கள். இலை, தழைகளை சாப்பிடுபவர்கள் என்றும் சைவ உணவுக்காரர்கள் கிண்டல் செய்யப்படுகின்றனர்.
புல் , பூண்டு சாப்பிடுபவர்கள், உடலில் சத்தே இருக்காது என்றும் சைவத்தை மட்டம் தட்டி, தங்கள் உணவை பெருமையாக நினைக்கும் அசைவக்காரர்களுக்கு இது வருத்தமான செய்தியாக இருக்கலாம்.
மேலும் படிக்க | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா; Vitamin B குறைபாடு இருக்கலாம்!
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், அசைவ உணவு உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் குறைவு என்று தெரியவந்துள்ளது.
மிகவும் துல்லியமாகச் சொல்வதென்றால் சைவ உணவு உண்ணும் பேஸ்கேட்டேரியன்கள் (pescatarians) எனப்படும் இறைச்சியில் மீன் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு பிறரை விட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 14 சதவீதம் குறைவு.
இந்த ஆய்விற்காக, ஆராய்ச்சியாளர்கள் 470,000 க்கும் மேற்பட்ட பிரிட்டன் மக்களின் தரவுகளை ஆய்வு செய்தனர். பெஸ்காடேரியன்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
இருப்பினும், இறைச்சி உண்பது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பது இந்த ஆய்வின் அர்த்தம் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆக்ஸ்போர்டின் மக்கள்தொகை சுகாதார புற்றுநோய் தொற்றுநோயியல் பிரிவைச் (Oxford’s population health cancer epidemiology unit) சேர்ந்த கோடி வாட்லிங் தலைமையிலான குழு, புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் உடல் கொழுப்பு உள்ளடக்கம் போன்ற காரணிகளும் புற்றுநோயின் அபாயத்தை தீர்மானிப்பதில் பங்கு வகிக்கிறது என்று கூறியது.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகள் உதவுமா?
சரி, உணவை சைவ உணவு என்ற வரையறைக்குள் கொண்டு வரும் காரணிகள் என்ன? மீன் சைவம் தான் என்று சொல்லும் பெங்காலிகளும் உண்டு. முட்டையைக் கூட அசைவத்தில் சேர்ப்பவர்களும் உண்டு.
ஆனால், உலக அளவில் பொதுப்படையாக, சைவ உணவு என்பது தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கின்றது. இறைச்சி, கடலுணவு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்த்து, நிலத்தில் விளையும், காய்கறிகள், தானியங்கள் அனைத்தும் சைவமாக கருத்தப்படுகிறது.
விலங்குகளில் இருந்து பெறப்படும் பால் சைவ உணவா அசைவ உணவா என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
மேலும் படிக்க | இதய ஆரோக்கியம்: மாரடைப்பு அபாயத்தை நீக்கும் ‘சிறந்த’ உணவுகள்!
சைவ உணவை சாப்பிடுபவர்களுக்கு பிறரைவிட புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவு என்று ஆய்வு கூறும் முடிவுகளின் சாராம்சம் இவை:
ஒரு வாரத்தில் ஐந்து முறைக்கு குறைவாக இறைச்சி உண்பவர்களுக்கு குடல் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் 9% குறைவு
சைவ உணவு உண்ப பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 18% குறைவு
சைவ உணவு உண்பவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் 31% குறைவு
சைவ உணவுகள் மற்றும் மீன் மட்டுமே ஆண்களில், புரோஸ்டேட் புற்றுநோயை உருவாக்கும்ஆபத்து 20 சதவீதம் குறைவு
மேலும் படிக்க | அற்புதமான ஆரோக்கியத்தைத் தரும் கொய்யாக்கனி கொய்யா
மேலும் படிக்க | தொப்பையை வேகமாக கரைக்கும் ‘மேஜிக்’ட்ரிங்க்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR