11 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் நிலவில் (Moon) சிறிய அளவில் நீர் பரவலாகப் பரவியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. விஞ்ஞானிகள் குழு ஒன்று இப்போது நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகளை முதலில் கண்டறிந்ததாகக் கூறியுள்ளது. அதே நேரத்தில், மற்றொரு குழு சந்திரன் சுமார் 15,000 சதுர மைல்கள் (40,000 சதுர கிலோமீட்டர்) நிரந்தர நீர் பாறைகளைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது. அவற்றில் பனி வடிவத்தில் நீர் பாக்கெட்டுகள் இருக்கக்கூடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீர் ஒரு விலைமதிப்பற்ற வளமாகும். நிலவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அது எதிர்கால விண்வெளி வீரர்களுக்கும் ரோபோடிக் பணித்திட்டங்களுக்கும் மிகவும் பயணிகளுக்கும். குடிநீர் மற்றும் எரிபொருளின் மூலப்பொருளாக நிலவில் எப்போதும் நீரின் அவசியம் உள்ளது.


மேரிலாந்தில் உள்ள நாசாவின் (NASA) கோடார்ட் விண்வெளி விமான மையத்தின் கேசி ஹொன்னிபால் தலைமையிலான குழு நிலவின் மேற்பரப்பில் நீரின் மூலக்கூறுகளைக் கண்டறிந்தது. இவை இயற்கை கண்ணாடிகளுக்குள்ளும் நிலவின் பரப்பில் உள்ள குப்பை தானியங்களுக்கு இடையிலும் சிக்கியுள்ளது தெரிந்தது. முந்தைய ஆய்வுகள் தண்ணீருக்கும் அதன் மூலக்கூறான ஹைட்ராக்சிலுக்கும் இடையிலான தெளிவற்ற தன்மையால் பாதிக்கப்பட்டன. ஆனால் புதிய ஆய்வு பயன்படுத்திய முறையால் உறுதியான முடிவுகள் தெரிய வந்துள்ளன.


சூரிய ஒளியால் ஒளிரூட்டப்பட்ட நிலவின் மேற்பரப்பில் நீர் நிலைத்திருக்க ஒரே வழி, கனிம தானியங்களுக்குள் பதிக்கப்பட்டு இருப்பது. இதனால் இந்த நீர், உறுதியான சூழலில் பாதுகாப்பாக இருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் தொலைநோக்கியைக் கொண்டு செல்ல மாற்றியமைக்கப்பட்ட போயிங் 747 எஸ்.பி விமானமான சோஃபியா வான்வழி ஆய்வகத்திலிருந்து தரவைப் பயன்படுத்தினர்.


“நான் கண்டுபிடித்தது நீர் பனி என்று பலர் நினைக்கிறார்கள். அது உண்மை இல்லை. இது வெறும் நீர் மூலக்கூறுகள் - அவை பரவியுள்ளதால், அவற்றால் ஒன்று கூடி நீர் பனி அல்லது திரவ நீரை உருவாக்க முடியவில்லை” என்று ஹொன்னிபால் கூறினார்.


ALSO READ: 23 மில்லியன் மதிப்புள்ள டாலர் கழிப்பறையை விண்வெளிக்கு இன்று அனுப்புகிறது NASA!


நேச்சர் ஆஸ்ட்ரோனமி இதழில் வெளியிடப்பட்ட இரண்டாவது ஆய்வு, நிலவின் குளிர் பொறிகள் என்று அழைக்கப்படும், நிரந்தர இருளில் இருக்கும் அதன் மேற்பரப்பின் பகுதிகள் மீது கவனம் செலுத்தியது. இங்கு வெப்பநிலை மைனஸ் 260 டிகிரி பாரன்ஹீட் (மைனஸ் 163 டிகிரி செல்சியஸ்) ஆக இருக்கும். இதன் காரணமாக உறைந்த நீர் பில்லியன் ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும்.


கொலராடோ பல்கலைக்கழகத்தின் கிரக விஞ்ஞானி பால் ஹெய்ன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், நாசாவின் லூனார் ரெகொனைசன்ஸ் ஆர்பிட்டர் விண்கலத்தின் தரவைப் பயன்படுத்தி, பல்லாயிரக்கணக்கான பில்லியன் சிறிய ஷேடோக்களை கண்டுபிடித்தார். இவை சிறிய நாணய அளவில்தான் இருக்கும். இவற்றில் பெரும்பாலானவை துருவப் பகுதிகளில் அமைந்துள்ளன.


"சந்திரனின் முன்னர் அறியப்படாத பல பகுதிகள் நீர் பனியைக் கொண்டிருக்கக்கூடும் என்பதை எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது" என்று ஹெய்ன் கூறினார். "முன்னர் நினைத்ததை விட நிலவின் துருவப் பகுதிகளில் நீர் மிகவும் பரவலாக இருக்கக்கூடும் என எங்கள் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதனால் இவற்றை அணுகவும், பிரித்தெடுக்கவும் பகுப்பாய்வு செய்யவும் எளிதான வாய்ப்புகள் கிடைக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.


விண்வெளி வீரர்களை சந்திரனுக்குத் திரும்ப அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. நிலவில் நீரின் இருப்பு குறித்த ஆராய்ச்சிகளுக்கு இனி அதிக முனைப்பு அளிக்கப்படும்.


“நீர் துருவப் பகுதியில் மட்டும் இல்லை. நாங்கள் நினைத்ததை விட இது மிகவும் பரவலாக நிலவில் நீர் உள்ளது ” என்று ஹொன்னிபால் கூறினார்.


நிலவில் நீர் என்ற கருத்தில் தீர்க்கப்படாத மற்றொரு மர்மும் உள்ளது.


"நிலவில் நீரின் முலம், தோற்றம் இவை அனைத்துக்கும் நாங்கள் எங்களது பல்வெறு ஆராய்ச்சிகள் மூலம் பதிலளிக்க முயற்சிக்கும் பெரிய பட கேள்விகளில் ஒன்றாகும்" என்று ஹெய்ன் கூறினார்.


பூமி ஒரு ஈரமான உலகம், பரந்த உப்பு சமுத்திரங்கள், பெரிய நன்னீர் ஏரிகள் மற்றும் பனிக்கட்டிகள் ஆகியவை நீர்த்தேக்கங்களாக இங்கு செயல்படுகின்றன.


"நமது நெருங்கிய கிரகத் தோழனான நிலவில் நீரின் இருப்பதைப் புரிந்துகொள்வது, பூமியில் நீரின் இருப்பு பற்றியும் நமக்கு பல விஷயங்களை புரிய வைக்கும்” என்று ஹெய்ன் மேலும் கூறினார்.


ALSO READ: பூமியில் உள்ள அனைவரும் கோடீஸ்வரர்களா! நிஜமாகப் போகும் கற்பனைக்கு வித்திடும் நாசா...


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR