2020 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு வழங்கப்பட்டது. "கடினமான அழகுடன் தனிப்பட்ட இருப்பை உலகளாவியதாக ஆக்குகிறது என்ற தெளிவான கவித்துவமான குரலுக்காக" இந்த விருது வழங்கப்பட்டதாக நோபல் பரிசு கமிட்டி தெரிவித்தது. அமெரிக்க கவிதாயினி லூயிஸ் க்ளூக் (Louise Glück) 1943 இல் நியூயார்க்கில் பிறந்தவர், லூயிஸ் க்ளூக், தற்போது மாசசூசெட்ஸின் (Massachusetts) மாகாணத்தின் கேம்பிரிட்ஜில் வசிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்டாக்ஹோமில் ஸ்வீடிஷ் அகாடமியின் நிரந்தர செயலாளர் மேட்ஸ் மால்ம் இந்த நோபல் பரிசை அறிவித்தார். தேசிய மனிதநேய பதக்கம், புலிட்சர் பரிசு , தேசிய புத்தக விருது, தேசிய புத்தக விமர்சகர்கள் வட்ட விருது, மற்றும் பொலிங்கன் பரிசு உள்ளிட்ட அமெரிக்காவின் பல முக்கிய இலக்கிய விருதுகளை வென்றுள்ளார்.  


தற்போது, யேல் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணிபுரியும் லூயிஸ் க்ளூக், ரோசன்க்ரான்ஸ் எழுத்தாளர் திட்டத்திலும் உள்ளார்.



1968 ஆம் ஆண்டில் ஃபர்ஸ்ட்பார்ன் (Firstborn) என்ற படைப்பின் மூலம் இலக்கிய உலகத்தில் அறிமுகமான லூயிஸ், விரைவிலேயே அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக இடம் பிடித்தார். புலிட்சர் பரிசு (1993) மற்றும் தேசிய புத்தக விருது (2014) உட்பட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார் லூயிஸ் க்ளூக்.


பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகளையும், கவிதைகள் குறித்த சில கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார் லூயிஸ் க்ளூக். குழந்தை பருவமும் குடும்ப வாழ்க்கையும், பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுடனான நெருங்கிய உறவு என மனித உறவுகளை கருப்பொருளாக கொண்டு தனது படைப்புகளை படைக்கும் லூயிஸ் க்ளூக், சுயத்தின் மாயைகளை எதிர்கொள்பவர் என்று கூறப்படுகிறது.  


இது உண்மையா என்ன? 2021 நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார் அமெரிக்க அதிபர் Donald Trump!!


உலகளாவிய இலக்கியங்களை படிப்பதில் விருப்பம் கொண்ட லூயிஸ் க்ளூக், புராணங்கள் மற்றும் கலாசார அடிப்படையிலான இலக்கியங்களில் இருந்து உத்வேகம் பெறுகிறார், இதை அவரது பெரும்பாலான படைப்புகளில் காண முடியும்.  


The Triumph of Achilles (1985) மற்றும் Ararat (1990) போன்ற தொகுப்புகளால் க்ளூக் அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் பிரபலமானார். Ararat புத்தகத்தில் மூன்று வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரத்தை படைத்திருப்பார். தனது கவிதைகளில் சாதாரண கற்பனையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை உணர்ந்ததாகவும் க்ளூக் சுட்டிக்காட்டுகிறார். ஏமாற்றுதல், வேதனையான குடும்ப உறவுகளின் நிதர்சனம், மனிதநேயமே இல்லாமல் மிருகத்தனமாக நடந்துக் கொள்வது போன்றவற்றை அப்பட்டமாக தனது எழுத்துகளில் வார்ப்பவர் க்ளூக். நேர்மையான மற்றும் சமரசமற்ற எழுத்தை வெளிப்படுத்தும் அவரது கவிதைகளில் அலங்காரம் ஏதும் இருக்காது.  


எலியட்டில் (Eliot) உள்ள அவசர தொனியை, கீட்ஸ்-இன் (Keats) உள்நோக்கி கேட்கும் கலை அல்லது ஜார்ஜ் ஓப்பனி-இன் (George Oppen) மெளனத்தை மேற்கோள் காட்டும்போது அவரது சொந்த கவிதைகளின் தொனியும், அவதானிப்பும் அதிகம் வெளிப்படுகிறது. ஆனால் லூயில் க்ளூக்கின் இயல்பான தீவிரத்தன்மையிலும், நம்பிக்கையின் எளிய கொள்கைகளை ஏற்க விருப்பமின்மையாலும்,  கவிதாயினி எமிலி டிக்கின்சன்-உடன் (Emily Dickinson) அதிகம் ஒத்துப் போகிறார் நோபல் பரிசு வென்ற  லூயிஸ் க்ளூக்.


மனித மூளை உறைந்து போகுமா?  2000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் மூளையின் செல்கள் சொல்லும் சேதி என்ன தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR