பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான உலகமாகும். இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு. விலங்குகளின் வைரல் வீடியோவை காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் சுவாரஸ்யமான இணைய உலகத்தில் சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்பு வீடியோவுக்கு அதிகளவு மவுசு உள்ளது. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. 


மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள்


தற்போது கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் சிஎஸ்ஐ ஆலயம்  மற்றும் பள்ளிகளுக்கான சிஎஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகம் உள்ளது இந்த அலுவலகம் முன்பு பல்வேறு பூச்சடிகளும் மரங்களும்  காணப்படும், இந்த நிலையில் இன்று வழக்கம் போல பணியாளர்கள் அங்கு வேலை பார்த்து வந்தனர் அப்போது சுமார் 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது. இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அந்த பாம்பை வனத்துறையினர் லாபமாக பிடித்துச் சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.


வீடியோவை இங்கே காண்க: