வைரல் வீடியோ: : நீங்கள் ரயிலில் பயணம் செய்தால், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (CISF) பணியாளர்கள் பயிற்சி பெற்ற நாய்களுடன் ரயில்களில் பயணம் செய்வதையோ அல்லது ரயில் நிலையங்களில் சுற்றி வருவதையோ நீங்கள் பார்த்திருக்கலாம். சர்வதேச யோகா தினத்தில் ராணுவ நாய்கள் யோகா செய்வதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் CISF நாய் ஒன்று, தனக்கு பயிற்சி அளித்த CISF அதிகாரியுடன் மிகவும் ஒழுக்கமாக யோகா செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CISF கருப்பு லாப்ரடோர் நாய் தனது பயிற்சியாளருடன் யோகா செய்யும் அழகான வீடியோ சமூக வலைதளங்களில்  மிகவும் வைரலாகி வருகிறது. அதிகாலையில் சில பயணிகள் மட்டுமே ஸ்டேஷனில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ  என்பதை காட்சிகளை வைத்துப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் உள்ள 'bharatdefenders' பக்கத்தில் பகிரப்பட்டது. மனிதர்களைப் பின்பற்றி நாய் யோகா செய்யும் அழகிய காட்சியை நீங்கள் கீழ்கண்ட வீடியோவில் காணலாம்.


மேலும் படிக்க | Viral News: கையில் சுற்றிய நாகப்பாம்பை கடித்து குதறி கொன்ற 8 வயது சிறுவன்!


வைரலாகும் வீடியோ:



CISF அதிகாரியை நோக்கி நாய் அமர்ந்திருக்கிறது. அப்போது அந்த அதிகாரி செய்யும் உடற்பயிற்சியை நாய் மிகவும் துல்லியமாக பின்பற்றுகிறது. பல பயணிகள் அந்த அழகிய காட்சியை தங்கள் தொலைபேசியில் படம்பிடிப்பதைக் காண முடிந்தது. இன்ஸ்டாகிராமில் 'bharatdefenders' பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ, 18,000 பார்வைகளைப் பெற்றுள்ளது. வீடியோவுக்கு 1,250 லைக்குகளும் கிடைத்துள்ளன.


மேலும் படிக்க | Viral Video: ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் மலைப்பாம்பும் ராஜநாகமும்! மனம் பதற வைக்கும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ