திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, ஆடலூர், பன்றி மலை, கே.சி பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களையும்,விவசாய பயிர்களையும் காட்டு யானை சேதப்படுத்தி வருகிறது. மேலும் மலைக்கிராம விவசாயிகளையும் அவ்வப்போது தாக்கி வருவதும் வாடிக்கையாக உள்ளது.  இந்நிலையில் கீழ்மலை கிரமமான பள்ளத்துகால்வாய் மலைச்சாலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் சாலைக்கு வந்த காட்டு யானையை வனத்துறையினர் வாகனத்தில் அதிக ஒலி எழுப்பியும், கூச்சலிட்டும் யானையை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரட்டியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து காட்டு யானை தனது குட்டி யானையை பாதுகாக்க தலைதெறித்து ஓடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது போன்று காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டுவதால் விவசாய நிலங்களில் முகாமிடும் காட்டு யானைகள் ஆக்ரோஷமாக மலைக்கிராம விவசாயிகளை தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மலைக்கிராம விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 


மேலும் படிக்க | Viral Video: இது என்னடா சோதனை... தண்ணீர் குடிக்க போராடும் குட்டி யானை


மேலும் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை காட்டு யானைகள் உண்டு செல்வதால் தாங்களுக்கு சிறிது அளவில் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. இது போன்று வனத்துறையினர் அச்சுறுத்தும் வகையில் காட்டு யானைகளை விரட்ட வேண்டாம் என மலைக்கிராம விவசாயிகள் வனத்துறையினறுக்கு கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை


மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்


மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ