எண்ணிலடங்கா உயிரினங்களை அடக்கி, பல நாடுகள் மற்றும் கண்டங்களை கொண்டு மிகப்பெரிய பிரபஞ்சமாக இந்த உலகம் செயல்பட்டு வருகிறது. ஆனால், இவ்வளவு பெரிய உலகையும் நம் கையில் உள்ள சிறிய கைப்பேசி மிகவும் சுருக்கி விட்டது. நாம் உபயோகிக்கும் சமூக வலைதளங்கள் அனைத்தும் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போகிறது. இவற்றின் வாயிலாக பல சமயங்களில் அதிர்ச்சிகரமான விஷயங்களையும் ஆச்சரியமூட்டும் தகவல்களையும் தெரிந்து கொள்கிறோம். அப்படி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையிலான வீடியோ ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாகவே, பாம்பை பார்த்து படையும் நடுங்கும் என பலர் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம. ஆனால், இங்கு ஒரு சிறுவன், கழுத்தில் பாம்பையும், மடியில் முதலையையும் பின்னாள் புலியையும் வைத்துக்கொண்டு ரிலாக்ஸாக அமர்ந்திருக்கிறான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயமறியாத சிறுவன்:


இளங்கன்று பயமறியாது என்பார்கள். அதை நிரூபிக்கும் வைகயில், சில குழந்தைகள் தைரியமாக பல விஷயங்களை செய்து காட்டுவார்கள். அந்த வகையில், ஒரு குழந்தை விஷ ஜந்துவான பாம்பு, முதலையை மடியிலும் போட்டுக்கொண்டு இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் “அவன் கண்ணுல பயமே இல்ல..” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 


மேலும் படிக்க | தினமும் கடலை மிட்டாய் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ உடனே வீடியோவை பாருங்கள்


வைரல் வீடியோ:


உலகில் உள்ள பலரால் பரவலாக உபயோகப்படுத்தப்படும் ஒரு சமூக வலைதளம், இன்ஸ்டாகிராம். 
இதில் பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில் ஒரு இடத்தில் நாற்காலி போட்டு அமர்ந்துள்ள சிறுவன், தனது மடியில் முதலையையும் கழுத்தில் விஷப்பாம்பையும் வைத்துக்கொண்டு ஹாயாக அமர்ந்திருக்கிறான். சரி, இதுதான் என்று பார்த்தால் அந்த பையனுக்கு பின்னாள் ஏதோ ஆரஞ்சு நிறத்தில் தெரிகிறது. என்னவென்று தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு பகீரென்று தூக்கிவாரி போட்டுள்ளது. பின்னால் இருப்பது வேறு எதுவும் அல்ல, ஒரு புலி. 



நெட்டிசன்களுக்கு செம ஷாக்:


இது போன்ற வினோதமான பழக்கத்தை உடையவர்கள் வெளிநாட்டில்தான் பெரும்பாலும் இருப்பர். ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோவில் உள்ள சிறுவன் இந்தியாவை சேர்ந்தவன். இந்த வைரல் வீடியோவும் இந்தியாவில்தான் எடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒரு இந்தி பாடலும் இணைக்கப்பட்டுள்ளது. 


இந்த வீடியாேவை பார்க்கும் தங்களுக்கே உள்ளூர நடுங்குவதாகவும் அந்த சிறுவன் எப்படி பயப்படாமல் இருக்கிறான் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 


மேலும் படிக்க | இது என்னப்பா புல்லட் இப்படி இருக்கு.. இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ