உடலுறவில் ஆணுறைக்கு பதிலாக பசையை பயன்படுத்திய நபர் பரிதாப மரணம்
குஜராத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் உடலுறவின் போது, ஆணுறைக்கு பதிலாக பசையை பயன்படுத்தியது அவரது உயிரை பறித்தது.
குஜராத்தைச் (Gujarat) சேர்ந்த இளைஞர் உடலுறவின் போது, கர்ப்பத்தை தவிர்க்கும் நோக்கில், ஆணுறை இல்லாத நிலையில், அந்தரங்க பகுதியில் ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படுன் வலுவான பிசின் ஒன்றை பயன்படுத்தியுள்ளார். அதனால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. 25 வயதான ஒரு பெண் நண்பருடன், நெருக்கமாக இருந்த அந்த இளைஞர், ஆணுறை இல்லை என்பதை உணர்ந்ததால் அவர்கள் கர்ப்பத்தை தவிர்க்க ஒரு வகை பிசினை பயன்படுத்தினர்.
இந்த சம்பவம் ஜூன் 22 அன்று அகமதாபாத்தின் (Ahmedabad) ஜுஹாபுரா பகுதியில் நடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இறந்த இளைஞர் சல்மான் மிர்சா என்பவர். அவரும் அவரது காதலி ஆகிய இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவந்ததது. அவர்கள் இருவரும் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில், நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றனர். அங்கே உடல் உறவில் ஈடுபட்டனர்.
Also Read | Viral Music: காக்கிச்சட்டைக்குள் இசைக் கலைஞர்கள்! போலீசின் மற்றொரு முகம்…
"கர்ப்பத்தை தவிர்க்க எந்த பாதுகாப்பும் மேற்கொள்ளாததால், காதலிவ்கர்ப்பமாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அவருடைய அந்தரங்கப் பகுதிகளில் பிசின் தடவி உடல் உறவு கொள்ள அவர்கள் முடிவு செய்தனர்" என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
தற்செயலாக, அவர்களிடம் பிசின் அல்லது பசை இருந்ததால், அதனை அவர்கள் அந்தரங்க உறுப்பின் மீது பயன்படுத்தத் தொடங்கினர். பிசின் சல்மானின் உள் உறுப்புகளை சேதப்படுத்தியது, மேலும் இதனால், உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக, சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இந்த காதல் ஜோடிகள், உடலுறவு கொண்டதற்கு ஒரு நாள் பிறகு மிர்சா மயக்க நிலையில் சாலையில் காணப்பட்டார் . அவருக்கு தெரிந்த ஒரு நபர் அவர் மயங்கி கிடப்பதை பார்த்து அவரை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் அருகில் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Also Read | இளஞ்சிவப்பு டால்பினின் அற்புதமான தோற்றம்! இணையத்தில் வைரல்
அவரது வயதான பெற்றோர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள், இவரது வருமானத்தை சார்ந்தே இருந்தனர். அவர் வீட்டில் சம்பாதிக்கூடிய ஒரே நபரகா இருந்தார். அவரது தடயவியல் அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
Read Also | Super Mother Hero: 10 ஆப்கன் சிறுமிகளை மீட்ட 11 குழந்தைகளின் அமெரிக்க அன்னை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR