மெல்போர்ன் திரைப்பட விழாவில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சூர்யா பெயர் பரிந்துரை!

மெல்போர்ன் திரைப்பட விழாவில் சூரரைப் போற்று திரைப்பட இயக்குநர் சுதா கொங்கராவின் பெயர், சிறந்த இயக்குநர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கான பரிந்துரைப் பட்டியலில் இதே படத்திற்காக நடிகர் சூர்யா சிவக்குமாரின் பெயர் இடம் பெற்றுள்ளது...
சென்னை: மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ள இந்தியத் திரைப்படங்களுக்கான விருதுகள் விழாவில் சிறந்த நடிகர் தேர்வுக்கான போட்டியில் நடிகர் சூர்யாவின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ள திரைப்பட விருதுகளில் சிறந்த இந்தியப் படங்கள், நடிகர்கள் உள்ளிட்ட திரைத்துறை விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
தமிழ் திரையுலகின் தரப்பில் இருந்து சூரரைப் போற்று திரைப்படத்தைத் தவிர, சேத்து மான், நசீர் ஆகியப் படங்கள் சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மலையாள திரையுலகத்தின் சார்பில் ‘தி க்ரேட் இந்தியன் கிச்சன்’ என்ற திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Also Read | Soorarai Pottru: இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்
சிறந்த இயக்குநர்களுக்கான பெயர் பரிந்துரைப் பட்டியலில் ‘சூரரைப் போற்று’ திரைப்பட இயக்குநர் சுதா கொங்கராவின் பெயர் இடம் பெற்றுள்ளது. ‘சூரரைப் போற்று’ திரைப்படக் கதாநாயகன் நடிகர் சூர்யா சிவக்குமாரின் பெயர் சிறந்த நடிகருக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக, ஆஸ்கர் விருதுக்கும் சூரரைப் போற்று திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது. பொதுப்பிரிவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிட்டாலும், விருது எதுவும் கிடைக்கவில்லை.
நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் 1997ஆம் ஆண்டு திரையுலகில் காலடித் தடம் பதித்தார் சூர்யா. தினகரன் பத்திரிக்கையின் சிறந்த புதுமுக நடிகராக சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நந்தா திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2002 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சிறந்த நடிகர் விருதை பெற்றார் சூர்யா. 2003ம் ஆண்டில் பிலிம்பேர் விருதுகளில் பிதாமகன் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான பரிசை சூர்யா பெற்றார்.
Also Read | நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா?
மொத்தம் நான்கு முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்ற சூர்யா சிவக்குமார் மூன்று சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். தனியார் தொலைகாட்சியான விஜய் டிவி அளிக்கும் சிறந்த திரைப்பட நடிகருக்கான விருதுகளில் பதின்மூன்று முறை பரிந்துரைக்கப்பட்ட சூர்யா, ஐந்து முறை பரிசு வென்றார்.
தற்போது மெல்போர்னில் நடைபெறும் திரைப்பட விழாவில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக இந்த சூரர் விருது வெல்வார் என்று அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.
Also Read | சூப்பர் நடிகர் சூரர் சூர்யாவின் அசத்தல் in pics
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR