சென்னை: 2 டி என்டர்டெயின்மென்ட் மற்றும் அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட் இணைந்து இந்தி சூரரைப் போற்று திரைப்படத்தை தயாரிக்கின்றன. கதாநாயகன் நெடுமாறன் ராஜாங்கம் என்னும் மாறா-வைச் சுற்றியே, சூரரைப் போற்று திரைப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. நடிகர் சூர்யாவின் அருமையான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
சாதாரண மக்களையும் விமானத்தில் பயணிக்க முயற்சி செய்யும் லட்சிய இளைஞனின் கதாபாத்திரத்தில் கலக்கினார் சூர்யா. பல்வேறு தடைகளையும் தாண்டி, குடும்பம், நண்பர்கள் மற்றும் விடாமுயற்சியால் தன்னுடைய லட்சியத்தை அடைகிறார் மாறா.
ஏர் டெக்கான் விமான நிறுவனர் கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் (Air Deccan founder Capt. G.R. Gopinath) வாழ்க்கையில் நடைபெற்ற சில நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட திரைப்படம் இது.
Excited to announce our association with @Abundantia_Ent lead by @vikramix for #SooraraiPottru in Hindi, Directed by #SudhaKongara@CaptGopinath#Jyotika @rajsekarpandian @ShikhaaSharma03 @2D_ENTPVTLTD pic.twitter.com/ECjSpO9OOT
— Suriya Sivakumar (@Suriya_offl) July 12, 2021
தன்னுடைய சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் உருவாவது மிகவும் மகிழ்ச்சி தருவதாக நடிகர் சூர்யா உற்சாகமடைகிறார். தனது குடும்ப திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் (2D Entertainment) இந்தியில் திரைப்படத்தை தயாரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் சூர்யா.
இந்த திரைப்படத்தின் கதையை கேட்ட நிமிடத்திலிருந்து இது ஒரு பான் இந்தியா படமாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன், ஏனெனில் கதையின் கரு ஒரு மொழியின் வரம்புக்குள் அடைபடுவதல்ல. கேப்டன் கோபிநாத்தின் எழுச்சியூட்டும் கதையை இந்திக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.
எப்போதும் தரமான திரைப்படங்களை உருவாக்கும் அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட் (Abundantia Entertainment) உடன் கூட்டு சேருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று நடிகர் சூர்யா சொல்கிறார் .
Also Read | நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா?
"சூரரைப் போற்று’ திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா (Sudha Kongara), இந்தி மொழியிலும் இயக்குநராக பணிபுரிவார். “சூரரைப் போற்று திரைப்படத்தின் கதை, கேப்டன் கோபிநாத்தின் கதை, ஒரு துணிச்சலான மற்றும் ஊக்கமளிக்கும் தொழில்முனைவோரின் கதை. 90 களின் புதிய இந்தியாவை சுருக்கமாகக் காட்டினார் அவர்" என்று சுதா கொங்கரா கூறினார்.
"இதுவரை இந்த திரைப்படம் தொடர்பாக எங்களுக்கு கிடைத்த பாராட்டுகளுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி. இந்த தனித்துவமான மற்றும் அற்புதமான கதையை இந்தியில் சொல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த இந்தி ரீமேக்கிற்கும் தமிழில் கிடைத்தது போன்ற வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று சுதா கொங்கரா கூறினார். இந்தி ரீமேக்கில் யார் நடிக்கப் போகிறார்கள் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Also Read | யூடியூப்பில் மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்த அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டர்
2005ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் கஜினியில் சூர்யா நடித்திருந்தார். இந்த திரைப்படமும் செம ஹிட்டானது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் சூர்யா, அசின், நயன்தாரா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் 2008ஆம் ஆண்டில் ஆமிர் கான் நடிப்பில் இந்தியிலும் கஜினி என்ற பெயரிலேயே உருவானது. இந்தியிலும் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கினார். ஹிந்தியிலும் சக்கைப்போடு போட்டு அனைவரின் அமோக வரவேற்பையும் பெற்றது கஜினி.
எனவே, சூரரைப் போற்று திரைப்படமும், கஜினியைப் போலவே இந்தியிலும் வரவேற்கப்படும் என்று திரையுலகினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Also Read | IMDb தரவரிசை: டாப் 3 இல் இடம்பெற்ற சூரரைப் போற்று
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR