நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா?

நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டியில் களம் இறங்கியிருக்கிறது, 'சூரரைப் போற்று' திரைப்படம் பொதுப்பிரிவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிடுகிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 26, 2021, 08:53 PM IST
  • ஆஸ்கரில் சூரரைப் போற்று போட்டி
  • ஆஸ்கரில் போட்டியிடும் நான்காவது இந்திய திரைப்படம்
  • ஆஸ்கர் நாயகனாவாரா சூரரைப் போற்று சூர்யா?
நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா? title=

புதுடெல்லி: நடிகர் சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல் என்றே சொல்லலாம். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் போட்டியிடுகிறது.

'சூரரைப் போற்று' திரைப்படத்தில் சூர்யாவின் அருமையான நடிப்பும், இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) அற்புதமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் அதிரடி இசை என திரைப்படம் அனைவரையும் ஈர்த்தது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் மற்றும் பிற பிரிவுகளில் பொது பிரிவின் கீழ் ஆஸ்கர் விருதுகளுக்கு சூரரைப் போற்று திரைப்படம்  இணைந்துள்ளது.

இதுவரை மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் மற்றும் மலையாளத் திரைப்படமான ஜல்லிக்கட்டு ஆகிய நான்கு இந்திய படங்கள் மட்டுமே இதுவரை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. தற்போது சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

Also Read | ரசிகரின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சூர்யா புகைப்படங்கள் Viral

இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். அதன்படி ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம் என விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

எனவே 'சூரரைப் போற்று' திரைப்படம் பொதுப்பிரிவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இது தமிழக திரையுலகினருக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் தேர்வாகி இறுதிப்போட்டியில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெற வேண்டும். அதன் பிறகு பரிந்துரைப் பட்டியலுக்கு உயரும். அதன் அடுத்த கட்டமாக ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படும்.
இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் விருதைப் பெற்றால் ஆஸ்கர் நாயகனாவர் சூரர் சூர்யா.

Also Read | சூப்பர் நடிகர் சூரர் சூர்யாவின் அசத்தல் in pics

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News