காதலர் தினத்தன்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' படத்திலிருந்து வெளியான 'அரபிக்குத்து' பாடல் ரசிகர்களின் மனதை கவர்ந்து பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி இருக்கிறது.  நெல்சன், அனிரூத் மற்றும் சிவகார்த்திகேயன் இடம்பெற்ற இந்த பாடலின் புரோமோவே ரசிகர்கள் பலராலும் ரசிக்கப்பட்டது, அதுமட்டுமல்லாது இப்பாடலை முழுமையாக எப்போது கேட்கப்போகிறோம் என்று அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.  புத்தாண்டு அல்லது பொங்கல் பண்டிகைக்கு இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்து ஏமாற்றம் அடைந்த நிலையில், அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக காதலர் தினமான பிப்ரவரி-14ம் தேதி இப்பாடல் வெளியாகி சிங்கிள்ஸ்களையும் காதலர் தினம் கொண்டாட வைத்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஏப்ரல் 14ம் தேதி பீஸ்ட்? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!



இந்த அரபிக்குத்து பாடல் வெளியானதிலிருந்து பலரது வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளில் 'ஹலமதிஅபிபு' தான் பரவலாக ஒலித்து கொண்டிருக்கிறது.  பொதுவாக ஒரு பாடல் ட்ரெண்டானாலே அதனை பலரும் ரீல்ஸ் செய்ய தொடங்கிவிடுவார்கள்.  அப்படி இருக்கையில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய 'அரபிக்குத்து' பாடலை மட்டும் ரசிகர்கள் சும்மாவா விடுவார்கள்.  சிறிய குழந்தை முதல் முதியவர்கள் வரை பலரும் உற்சாகமுடன் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து மேலும் பாடலை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


 



 



கடும் வெயிலடிக்கும் பாலைவனத்தில் ஒட்டகத்தை அருகில் வைத்துக்கொண்டு ஷேக்குகள் சிலர் ஒரே மாதிரியான உடை அணிந்துகொண்டு மிகுந்த உற்சாகத்துடன் அரபிக்குத்து பாடலை ரிக்ரியேட் செய்யும் விதமாக அதே நடன அசைவுகளுடன் நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் ரசிகர்கள் பலரையும் ஈர்த்து வருகிறது.  ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை பலரும் ரசித்து வருகின்றனர்.  அதனை தொடர்ந்து ஒரு குழந்தை அழகாக உடை அணிந்துகொண்டு தனது மழலை கொஞ்சும் சிரிப்பில் 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனமாடிய வீடியோ பலரையும் ஈர்த்துள்ளது.  மேலும் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்காக உள்ள அக்ஷய் அவரது பாட்டியுடன் இந்த பாடலுக்கு மகிழ்ச்சியுடன் நடனமாடி பலரது கவனத்தியும் ஈர்த்து வருகின்றனர்.  இதுபோன்ற பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.


 



மேலும் படிக்க | வலிமை உட்பட தென் இந்திய படங்களின் வெளியீடு தேதிகளின் முழு விவரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR