காதலர் தின பரிசாய் வெளிவந்துள்ளது அரபிக் குத்து பாடல்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் 'அரபிக் குத்து' எனும் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 14, 2022, 06:58 PM IST
  • பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது
  • அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இந்த பாடலை பாடியுள்ளனர்.
காதலர் தின பரிசாய் வெளிவந்துள்ளது அரபிக் குத்து பாடல்! title=

பீஸ்ட் முதல் சிங்கிள் அரபிக் குத்து பாடல் தற்போது வெளியாகி உள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' படத்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் அதிக ஆர்வமுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.  ஒவ்வொரு படங்களின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளிவர வெளிவர விஜய் ரசிகர்கள் பலரும் பீஸ்ட் படம் குறித்த ரிலீஸ் அப்டேட் வரவில்லையே என்று #BeastUpdate ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கானது.  மேலும் இப்படத்தின் முதல் சிங்கிள் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர்.  

மேலும் படிக்க | வலிமை உட்பட தென் இந்திய படங்களின் வெளியீடு தேதிகளின் முழு விவரம்

Image

இப்படத்தின் முதல் சிங்கிள் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்த்தனர், ஆனால் அந்த தினத்தில் பாடல் வெளியாகாமல் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.  அதனையடுத்து பொங்கல் பண்டிகைக்காவது பாடல் வரும் என்று எதிர்பார்த்து அதுவும் நடக்கவில்லை.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிப்ரவரி 14-ம் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பை ப்ரோமோ மூலம் வெளியிட்டனர். 

இப்படத்தின் இயக்குனர் நெல்சன், அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இடம்பெற்ற இந்த நகைச்சுவையான ப்ரோமோ பலரையும் ரசிக்க செய்து இந்த ப்ரோமோ வீடியோவே மில்லியன் பார்வைகளை தாண்டியது.  அரபிக் குத்து என்ற புது வகை பாடலாக முதல் சிங்கிள் வெளியாகும்  என்று இதன் மூலம் தெரிவிக்கப்பட்டது.  இந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் நிலையில் நேற்றைய தினத்திலிருந்தே விஜய் ரசிகர்கள் இப்பாடலின் போஸ்டரை பகிர்ந்து வந்தனர்.  படக்குழு அறிவித்தபடி இன்றைய தினம் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது. 

Image

அனிருத் இசையமைத்திருக்கும் இந்த பாடலுக்கு, பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.  இப்பாடலுக்கு பிண்ணனி குரல் கொடுத்துள்ளது அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி.  வழக்கம்போல நடிகர் விஜய் இந்த பாடலிலும் நடனத்தில் அசத்தி இருக்கிறார்.  இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் கோரியோக்ராப் செய்துள்ளார்.  இந்த பாடல் கிட்டத்தட்ட 'நண்பன்' படத்தில் இடம்பெற்ற ஒல்லி பெல்லி பாடல் போன்று பெல்லி நடன அசைவுகளின் பின்னணியில் அமைந்துள்ளது.  காதலர் தினத்தில் வெளியான இப்பாடல் சில நிமிடங்களிலேயே அதிக பார்வைகளை பெற்று ரசிகர்களை உற்சாகமடைய செய்து இருக்கிறது.

 

மேலும் படிக்க | ஏப்ரல் 14ம் தேதி பீஸ்ட்? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News