Viral Video: நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்படும் வீடியோ வைரல்
பெங்களூரு விமான நிலையத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்த விஜய் சேதுபதியை நபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
அண்மையில் தேசிய விருது பெற்ற நடிகர் விஜய் சேதுபதியை ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்த விஜய் சேதுபதியை நபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பாதுகாவலர்கள் உட்பட பலருடன் நடிகர் விஜய் சேதுபதி நடந்து சென்றுக் கொண்டிருக்கிறார். அப்போது, திடீரென வரும் நபர் தாக்குகிறார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து தடுத்து, விஜய் சேதுபதியிடம் இருந்து விலக்கிவிடுகிறார்கள்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது...
இது குறித்து, நடிகரின் தரப்பு எந்தவொரு கருத்தையும் வெளியிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டது. விமான நிலையத் தொழில் பாதுகாப்புப் படையினரின் விசாரணை வளையத்தில் இருக்கிறார் விஜய் சேதுபதியைத் தாக்க முயன்ற நபர். எனவே, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகலாம்.
சில நாட்களுக்கு முன்னதாக தேசிய விருது பெற்ற விஜய் சேதுபதி, இந்தியில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | மகளுடன் நடிக்கமாட்டேன்! விஜய் சேதுபதி அதிரடி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR